Wii அரிஸ்டாட்டில் என்ற யவனப் பேராசிரியர் கவிநயத்தினைச் சுவைக்கும் வழியை மேனாட்டில் தெளிவுபடுத்தினார். அவர் நாட்டு நூல்களைச் சுவைப்பதற்கு, அவர் காட்டியது சிறந்ததொரு வழியே ஆம். பின் வந்தார். அந்த வழி அன்றி வேறு வழி இல்லை என மயங்கினார். ஆனால், ஒரு முகம்போல ஒருமுகம் இருப்பதில்லை. அழகு, தனிப்பெருஞ்சிறப்பே ஆம். பாட்டும் ஒன்று போல ஒன்று இருப்பதில்லை. அதனதன் அழகினை அறிய அதனதன் வழியே மனத்தினைத் திளைக்க விட்டு, அதுவே ஆகிச் சுவைத்து, உணர்ந்து, உண்மையை வெளியிட வேண்டும். அரிஸ்டாட்டில் கூறியதனைக் கொண்டு ஷேக்ஸ்பியர் பாடலை அளந்தறிய முடியாது; ஹெகல் கூறியதனைக் கொண்டும் அளந்தறிய முடியாது. ஷேக்ஸ்பியர் தரும் பாட்டு விருந்தினைச் சுவைத்தே அவர் அளவுகோலைக் கண்டறிந்து அளந்தறிய முற்படவேண்டும். இவ்வாறு பெருஞ் சுவைஞர் பிராட்லி என்பார் ஆராய்வது காண்க. அவ்வாறே, கம்பனைச் சுவைத்தே, கம்பன் கையாண்ட அளவு கோலைக் கண்டறிந்து, அவன் பாடலை அளந்து பார்க்க முயல வேண்டும். நண்பர் திரு. ஞானசம்பந்தனார் இந்த வழியில் நம்மை அழைத்துச் செல்கின்றார்; பழைய தமிழ் மரபறிந்த குடும்பத்திற் பிறந்து, தமிழ்ப் பல்கலைக் கழகம் எனப்பாராட்டிக் கொள்ளும் இடத்தில் கல்வி பயின்றார்; பச்சைத் தமிழன் கண்ட இந்நாளைய தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராய் அமர்ந்து, இலக்கிய ஆராய்ச்சியில் மானவர்களை ஈடுபடுத்தும் தொண்டினைச் செய்யும் பெரும்பேறு பெற்றவர்; நாம் கூறி வந்த இலக்கணங்களுக்கு எடுத்துக் காட்டாக
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/9
Appearance