2 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் செயல்களின் விரிவால் ஓரளவு ஓர் உலகத்தையே தம்முள் அடக்கிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காப்பியமும் ஒரு சமுதாய மக்களின் சரித்திரத்தை அப்படியே கூற முற்படுகிறது. பெருங்காப்பியத்திற் கூறப்பட்ட செயல்கள் நடந்து பலகாலஞ்சென்ற பிறகே அவற்றைத் தொகுத்துக் கூறும் நூல் தோன்றுகிறது. ஆதிமனிதன் பலத்தைப் பெரிதாக மதித்து வெறும் வன்மைக்கு வணக்கம் செலுத்திவந்த காலமே மேற்கூறிய செயல் தோன்றச் சிறந்த காலமாகும். ஆனால், அந்நிலையில் சிறந்த கவிதை உடன் தோன்றுவதற்கில்லை. காரணம், மனித மனம் வளர்ச்சியடையாமையேயாம். எனவே, காலம் செல்லச் செல்ல, நாகரிகம் மிகமிக, கவிதைக் கலை மக்கள் மனத்தில் முகிழ்க்கும்போது, அக்கலை வெளி வருவதற்குச் சிறந்த சாதனமாக மேற்கூறிய செயல்கள் விளங்குகின்றன. ஆதி மனிதன் அடிப்படை உணர்ச்சி களாகிய காதல், வீரம், சினம் என்பவையும் அவற்றின் வெளிப்பாடுகளாகிய மணம், போர், சூழ்ச்சி முதலிய செயல்களுமே இக்காப்பியங்களில் பெரிதும் இடம் பெற்றன. என்றோ நடந்த செயலைக் கூட்டியும் குறைத்தும் கூறக்கூடிய தன்மையுடைமையினாலும், விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தரவேண்டிய இன்றியமை யாமை இன்மையினாலும் இக்காப்பியங்கள் சிறந்து விளங்குகின்றன. காப்பியங்கள் தோன்றும்பொழுது உள்ள மக்கள் வாழ்க்கைக்கும் அவற்றில் கூறப்பட்ட மக்கள் வாழ்க்கைக்கும் கடலனைய வேற்றுமை இருக்கலாம். காப்பியத்தில் கூறப்பட்ட செயல்கள் நடந்து பன்னெடுங் காலங் கழித்து நூல் தோன்றுவத னால், இவ் வேற்றுமைகள் இருந்தே தீரும். ஒரு
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/21
Appearance