50 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இரவி வெள்கநின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் நரகம் ஒக்குமால் நன்னெடுந் துறக்கம்இந் நகர்க்கு. (கம்பன் - 4848) இவ்வரிய நகரைச் சுற்றி மதில்கள் காணப் படுகின்றன. தேவருலகையே சென்று முட்டுவனவாய் உள்ளன. அவை. பொன்னாலே சமைக்கப்பட்ட அம் மதில்கள், "ஊழி திரிநாளும் உலையா மதில்" (1895) என்று கூறப்படுகின்றன. நாட்டுக் காவற்கு மதில் எவ்வளவு இன்றியமையாததென்பது கூற வேண்டுவதின்று. உயர்வு, அகலம், திண்மை, அருமைஇந் நான்கின் அமைவுஅரண் என்றுரைக்கும் நூல். (குறள், 743) என்ற பாடல் கருத்தைத் தன் மனத்துட்கொண்ட ஆசிரியன், "கதிரவன் இராவணன் ஆணைக்கு அஞ்சி இலங்கைமீது செல்வதில்லை என்று பிறர் கூறுவது தவறு. இவ்வுயர்ந்த மதிலைத் தாண்டிச் செல்ல இயலாததாலன்றோ அவன் இலங்கைமேற் செல்வதில்லை?" என்று இங்கனம் இயம்பி அனுமன் வியந்ததாகக் கூறுகிறான். மதிலின் சிறப்பைச் சிறந்த வீரனும், காற்றின் மகனும், கருங்கடலைத் தாவிச் செல்ல வல்லவனுமாகிய அனுமனே புகழ்ந்ததால், இது பன்மடங்கு உயர்தல் காண்க. இப்பெருமதிலிடத்துக் காணப்படுகிறது வாயில். ஓயாது பகைவர்க்கஞ்சும் நாடோ, சிறு வாயிலை யுடையதாயிருக்கும். இராவணனது வாயில் மேரு மலையை நிறுத்தி அதன் நடுவே ஒரு வெளி செய்தது போலவும், தேவர்கள் ஒருசேர வந்து புகுதற்கமைந்த பெருவெளி போலவும், கடல் நீர் வந்து புகுவதற்குச்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/69
Appearance