பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அறிவியல் நோக்கு மேனியுடன் திரும்புவீர்கள். எங்கள் சுவாதந்திரத்தைக் காட்டுவதற்காகவும், செளலப்பியம் செளசீல்யம் முதலிய திருக்குணங்களுடன் நிறைந்த இம்மானிடத்திருமேனியுடன் இங்கு எழுந்தருளி இங்குள்ளார் அதனைக் கண்டு களிக்கவும் வாய்ப்புகள் தரும்பொருட்டே நாங்கள் மூவரும் இந்த உக்தியைக் கையாண்டோம்” என்று கூறி குழந்தைகள் நால்வரையும் ஒப்படைத்தனர். காலம் நடையாடாத தேசமாகையால் எவ்வித வளர்ச்சியுமின்றி குழந்தைகள் நால்வரும் பிறந்த மேனியுடனேயே இருந்தனர். இந்த நிலவுலகிற்கு வந்ததும் முதல் குழந்தை மூன்று வயது, இரண்டாவது குழந்தை இரண்டு வயது, மூன்றாவது குழந்தை ஒரு வயது. நான்காவது குழந்தை பிறந்தநிலை என்று இருந்தனர் இங்குக் காலம் நடையாடுவதாகையாலே.