'தீயினை நயந்தான் 61 2. 'தீயினை நயந்தான்' இராவணனுக்கு உடன் தோன்றியவன் கும்பகருணன், 'உடன் பிறந்தே கொல்லும் வியாதி போன்றவனல்லன். செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற் காகத் தகாதது என்று தன் மனம் கூறிய செயலைக் கூடச் செய்தவன். அவன் கோழையல்லன்; இராவணனோடு ஒத்த வன்மையுடையவன். ஆகா யத்தை யழிக்கும் மேன்மையும், கடலை யனைய கண்களும் உடையவன் அவன். அவன் தம்பி வீடணனே அவனைக் குறித்துக் கூறுகையில் "மண்ணினை அளந்து நின்ற மாலென வளர்ந்து நின்றான்." என்று கூறுவானாகில், அவன் பெருமை நம்மால் அளவிடற்கு எளியதாமோ? இவ்வரிய வீரன் முதன்முதலில் மந்திரப் படலத்தில் காட்சியளிக்கிறான். "கேவலம், குரங்கு ஒன்று ஊரைச் சுட்டுச் சூறையாடி விட்டது" என்று உளமறுகி நிற்கின்றான் இராவணன், சிறந்த வீரனுக்குத் தகாததாகிய 'தன்னிரக்கம்' கொள்ளுகிறான்; தன்னாட்சி சிதைந்து போனதாக நினைந்து வருந்து கிறான். இந்நிலையில் கும்பகருணன் தமையனைக் காண்கிறான்; "மூவரும் அஞ்சத்தக்க போரினைச் செய்கின்றவனும், வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளி விண்தொட எடுத்த ஆற்ற லோனும் ஆகிய நீயா இங்கனம் வருந்துகின்றாய்" என்று கேட்கிறான், இராவணனை நோக்கி, அவன் கூறும் வார்த்தைகளினாலேயே தமையன் மாட்டுக் • Self-Pity
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/80
Appearance