பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 67

ஆலும் - அசையும்; முகில் - மேகம்; கருவண்ணம் படைதத மேகம் உடல் வெழுக்கும்படி மிகு செல்வம் வழங்குவோன் என்பதாம்; கரந்தை - சேது நாட்டுள்ளதோர் ஊர்: குமரன் - முருகன்; மலையில் குமரன் வீற்றிருப்பது எங்கும் காணும் காட்சி; குமரன் எங்கும் வேல் கையிலின்றி இருப்பதில்லை. விழைவொடு - விருப்பத்தோடு; வேலும் இலா மல் - வேல் போன்ற கண் இல்லாமல் என்றது கைகளால் கண்களை மறைத்த தன்மையைக் குறித்தது; குமரன் - இளைஞன், மலைமட்டும் - மலைக்கு ஒப்பாம் முலைகளை மட்டும்; பாலும் மிகு மென்மொழி - பால் இனிமை யினும் மிகு இனிமை படைத்த பேச்சு.

134

தெருவரை மாடர் திகழ்தேவை காவலன் றிண்புயமா இருவரை யேற்றவன் சீராச ராச னெழில்வரையீர் ஒருவரை மேலு மிருவரை புள்ள வொருவரென்னே திருவரை யாமுன் புகுவளை யுங்கைச் செறிப்பதுவே.

தெரு வரை மாடம் - தெருக்களில் மலைபோல் உயர்ந்த மாடம்; தேவை * இரா மேக வரம்; திண் புயமா - வலிய தோ ள்களாக, இருவரைஇருமலை; மலைபோல் திண்ணிய இரு தோள்கள் என்க. ஒருவரை மேல் - ஒப்பற்ற மலையின்மேல்; இருவரையுள்ள ஒருவர் - சிதேவி பூதேவியருடன் திகழும் ஒப்பற்ற திருமால்; திருவரையா முன் புகுவளைதிருமகள் தோன்றுவதற்கு முன் தோன்றிய சங்கு, பாஞ்சசன்னியம்: கை,செறிப்பது - கையில் ஏந்தியிருப்பது. ஒரு அரைமேலும் இருவரை உள்ள ஒருவர் - ஒற்றை இடையின்மேலே இரண்டு முலைகளைக் கொண்ட ஒப்பற்ற இத் தலைவி; திருவரையாமுன்பு - முலைமேல் திருவைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக, குவளையும் கைசெறிப்பது - குவளைமலர் போன்ற கண்களைக் கையால் மறைப்பது:

185

ஆரியர் மான மழியாமற் காத்திவ் வவனிவென்ற கூரியல் வேல்வல்ல சீராச ராசன் குளிர்வரையில் சீரியல் சூது பொரும்போரிற் பாரதக் தேற்றித்தக்தீர் வாரி யடைத்த படலத் திராமன் வரன்முறையே.