பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இதற்காகத்தான் வருகை நாள் என்று அவர்கள் சொன்னார்களோ?

ஆமாம் இதனால்தான் காற்றில் இசை இருந்ததென்றும், வானத்தில் வெளிச்சம் இருந்ததென்றும் அவர்கள் கூறினார்கள். -நா

முதல் அன்பில் நான் திளைத்துக் கொண்டிருந்த பொழுது, புதிய வியப்புடன் ஒருநாள் நீ என் வாழ்வில் வந்தாய்.

-கா. ப

எதன்மேல் என் காதலி நடக்கிறாளோ, அந்த மண்ணுக்குள் என் உடல் மறைந்து விடுவதாக நான் உணர்கிறேன்.

-நா

அவனுக்காகக் காத்திருந்து அவனுடைய காலடி ஓசையை நான் கேட்கும் பொழுது, மரங்களில் இலைகள் சலசலப்பதில்லை. ஆறுகளில் தண்ணீர் அமைதியுற்று நிற்கிறது. என் நெஞ்சம் மட்டுமே கடுமையாகத் துடிக்கிறது. அதை அமைதிப்படுத்த எனக்குத் தெரியவில்லை.

தோ

என் நெஞ்சம் வெளிச்சத்தில் உருகி கண்ணாடியில் ஒன்றிவிடுகிறது. அதில் அவன் தன் முகம் பார்க்கிறான்.

-நா