தீமையின் முதற்படி 8 175 இராவணன், உலகத்துப் பெரியோர்களுள் ஒரு தனிப்பட்ட பெருமையை உடையவனாகக் காட்சி அளிக்கிறான். அவனிடத்து, இரண்டொன்று மட்டும் - ஏன்? - பல நற்பண்புகள் இயற்கையான எல்லையைக் கடந்து ஓங்கிக் காணப்படுகின்றன. ஆகவேதான், காமம் என்ற அழிக்கும் பண்புக்கு இராவணன் வாழ்க்கையில் தீ நெறிக்கட்சென்ற பண்புக்கு - அவன் இடமளித்து அழிந்தானேனும், கவிஞன் அவன் திரு முகங்கள் இறப்பால் மும்மடங்கு பொலிந்தன எனப் பாராட்டிப் பேசுகின்றான். பல்லாயிரம் ஆண்டுகளாகப் போரிடுவதற்குத் தகுந்த எதிரி இன்மையால், இராவணன் வாழ்க்கையில் சோம்பல் புகுந்தது; வெறுப்புத் தோன்றிற்று. இயற்கை அவனை ஏதானுமொரு செயலில் ஈடுபடத் துண்டிற்று, கல்வி, தவம், போர் முதலிய துறைகள் எல்லாவற்றிலும் துறைபோகத் துய்த்தவனாகி விடவே, அவன் வாழ்க்கையை இன்பம் உடையதாகச் செய்ய, வேறு வழியின்றி, மகளிர் இன்பத்தில் மயக்கங் கொள்ளவேண்டி வந்தது. கலைகள் பலவும் இன்பத்தைத் தருமானாலும், ஒரளவுக்கு மேல் சலிப்பைத் தருவதும் அவற்றின் இயற்கையே. கலைகளனைத்தையும் சலிப்பைச் சிறக்கத் தரும் அளவுக்குக் கற்றுத்தேர்ந்த பின் சலிப்பை அவ்வளவு இலகுவாக அளிக்காத போருமின்மையால், இராவணன் மகளிரிடம் பெறும் இன்பத்தில் முழு மனத்தையும் செலுத்தினான் என்றும், சலிப்பேயின்றித் தோயத் தோயக் கவர்ச்சி அதிகமுடையதாய்த் தோற்றும் தகுதி வாய்ந்தது உலகத்தில் இது ஒன்றே அன்றோ? பிறகலைகளிற் போலவே, இதிலும் துறைபோக இராவணன் முயன்றதில் வியப்பென்ன? tom.si.-13
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/192
Appearance