உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (10) பத்மவிபூஷணம்: இலக்கியப் பேரறிஞர்கட்கு மத்திய அரசு வழங்கும் குடியரசுத் தலைவர் விருது 1967இல் நம் சுவாமிக்கு அளிக்கப்பெற்றது. இந்தப் பத்து விருதுகளும் முத்துமாலை போல் திகழ வாழ்ந்து வந்தார் நம் சுவாமி. சிங்கப்பெருமாள் சுவாமியின் திருவாக்கு: வைணவ உலகில் நிகரற்ற பெரிய ஞானியாகத் திகழந்தவர் காரப்பங்காடு சிங்கப்பெருமாள் சுவாமி. இவர்தம் அருமை பெருமைகளைக் கேள்வியுற்று இவரைச் சேவிப்பதற்காகவே ஒருமுறை திருஅரங்கம் எழுந்தருளினார் நம் சுவாமி. சோதிடத்திலும் நிகரற்ற புலமை கொண்டவர் சிங்கப் பெருமாள் சுவாமி, நம் சுவாமியின் சோதிடக்குறிப்பை ஆழ்ந்து நோக்கி அழுத்தம் திருத்தமாக உறுதிப்படச் சொன்னது." பிரதிவாதிபயங்கரர் என்ற குடிப்பெயர் உமக்கு உண்மையாகவே அமைந்தது. உலகிலுள்ள வித்வான்கள் அனைவரும் தாமாகவே உம்மிடம் எழுந்தருளி உம்முடைய திருவாக்கில் மாட்டிக் கொள்வார்கள்” அடியேனை ஆட்கொண்டது. சதாபிஷேகத்தில் முதன்முறையாகச் சந்தித்தபிறகு சுவாமிகளை (நான் ஓய்வு பெற்ற பிறகு 1979). இருமுறை காஞ்சியில் சந்தித்தேன். இருமுறையும், திருமண் காப்பிட்டுக் கொள்ளும் சமயம். திருமண் காப்புடன் அவர்தம் தரிசனம் உடலையும் உள்ளத்தையும் உருக்கக் கூடியது. இளவயதிலேயே அடியேனை மனங்கவர்ந்த இராமாநுஜரையே நேரில் காண்பது போன்ற பிரமை ஏற்பட்டது. சுவாமிகளிடம் என் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு சுவாமிகளிடம் அடியேன் அடக்கமாக விண்ணப் பித்தது. "டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு திரு. கி.வா. சகந்நாதனும், திரு. சுப்பிரமணிய அய்யரும் உடனிருந்து பல்வேறு திசைகளில் பணியாற்றியதுபோல், தங்கட்கு