உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைம் பொழில் 17 பெயராய்ச் சொற்களால் ஆன நூலை உணர்த்துகிறது. கம்பர் நூற்கலுற்றேன்’ என்று கூறியிருப்பது, உடை நெய்ய நூல் நூற்பது போல், சொல்லாகிய நூலால் (இழையால்) நூற்கலுற்றேன் என்னும் கருத்தைத் தருகின்றது. ஈண்டு,

பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையே வாயாகக் கதிரே மதியாக மையிலா நூல்முடியு மாறு' (24) என்னும் நன்னூல் பொதுப் பாயிர நூற்பா எண்ணத் தக்கது. தச்சரும் நூலோரும் : சிறு பிள்ளைகள் அறைகள் போலவும் ஆடும் நடன அரங்கம் போலவும் கீறி விளையாடினால், அவை: பொருத்தமாயில்லை எனச் சிற்பிகள் விளையாட்டுப் பிள்ளைகளை வெறுக்க மாட்டார்கள். அதுபோல், சிறிதும் புலமை இல்லாத என் புல்லிய பாடல்களை முறையாக நூல். உணர்ந்து கற்றவர்கள் வெறுக்க மாட்டார்கள். 'அறையும் ஆடரங்கும்படப் பிள்ளைகள் தறையில் கீறிடத் தச்சரும் காய்வரோ இறையும் ஞானம இல்லாத என் புன்கவி முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ (9) தச்சர் = சிற்பிகள்.இறையும் = சிறிதும். கல்வியில் சிறந்த ஒருவரை அவர் முறையாகக் கற்றவர்’ என்று குறிப்பிடுவதும், சிலர் அவையடக்கமாக நான் முறையாகத் தமிழ் கற்கவில்லை' என்று கூறுவதும், கம்பரின் முறையின் நூல் உணர்ந்தார் என்ற தொடரை அடி ஒற்றியதாகும் போலும். நூல் வழி ஒருவர் எந்த நூலையும் பின் பற்றாமல் தாமே முதல். முதலாக செய்த நூல் முதல் நூல் எனவும், அதன்வழி