தன் இரக்கம் 133 எண்ணற்ற இராக்கதர்களைக் கொன்று குவித்துச் சென்றான் அனுமன். அவர்கள் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் ஆறாய் ஒடிக் குளம், மடு, ஏரி முதலிய நீர்நிலைகளையெல்லாம் இரத்தமயமாக்கி விட்டது. இலங்கையில் குடிக்கத் தண்ணிர் கிடைக்க வில்லை. ஆகவே, இராவணன் கிணறு தோண்டச் செய்தான். ஆனால், பயன் பெறவில்லை. இராக்கதர் இரத்தம் பூமியில் ஊறித்தோண்டிய இடம் அனைத் திலும் இரத்தமாக ஊற்றுச் சுரக்கின்றது. தண்ணிரில் லாமல் மக்கள் எவ்வாறு காலஞ் செலுத்த முடியும்? 'அன்ன ஆப: வேதம் (ஜலமே பிரதான உணவு). உண்டி யில்லாமல் தவித்த இராவணன், தூக்கமில்லாமலும் தவிக்க நேர்ந்தது. அனுமன் இலங்கையில் வைத்த தீ அவியாமல் இருக்கிறது. வீடுகள் எரிந்து விழும் நகரத்தில் எவனுக்குத் தூக்கம் பிடிக்கும்? இத் துன்பங் களை மாற்றச் சற்று இன்பத்தைத் தரும் மெல்லிய லாரோடு கலந்திருக்கலாமென்றாலோ, அவர்கள் கூந்தல் சுறுநாற்றம் வீசுகின்றது. இவ்வாறு உண்டி, உறக்கம், இன்பம் இம்மூன்றையும் இராவணனுக்கு இல்லாமற் செய்த அனுமனை, அவன் எவ்வாறு மறக்கக்கூடும்? அனுமன் உயிருடனிருக்கிறான் என்ற எண்ணமே அவன் மனத்தை ஆறுதலடையச் செய்யாமலிருக்கப் போதியதன்றோ? ஆகவே தான், அவன், இலங்கையைப் புதுப்பித்த பின்பும் என்ன அனுமனையும் அவன் செயல்களையும் மறக்க முடியாதவனாகி, அவற்றையும் அவற்றால் அவனடைந்த பழியையுமே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். - - நமக்கு மட்டுமின்றி, இராவணனைச் சேர்ந்தவர்க்கும் அவனுடைய இந்நிலை கேலிக்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/150
Appearance