உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28



பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஒன்றைப் பாடி, அதனால் புகழ்பெற்றுக்"காக்கைப் பாடினியார்" எனப் பெயர் பெறுதல்போல, இவர் பாடிய பாடல்கள் அறுபத்தேழில், புறப்பொருள் தழுவிய பாடல் ஒன்று தவிர்த்து74 ஏனைய அறுப்பத்தாறும் நற்றிணையில் பத்தும்,75 குறுந்தொகையுள், பத்தும்,76 அகநானுாற்றில் பனிரெண்டும்,77 கலித்தொகையில் முப்பதும்78 அகத்திணைப் பொருள் தழுவியனவே.

இவர் புலவர் மட்டுமன்று, புலவர்களாலும், புகழப் பெற்றவர். புலவர் பேய்மகனார், பகைவெல்லும். பேராண்மையினையும், பானர்களுக்குப் பொன்மாலையினையும் பொற்றாமரை மலரையும் அளிக்கும் கொடைப்பெருமையையும், பாராட்டி உள்ளார்.79

போரில், ஆற்றல்காட்டிப் பகை வென்றுவிட்ட நிலையில், உயிர்விட்ட வீரனைக் "கடன் முடித்த காளை', எனப்பாராட்டியுள்ளார், பாலை பாடியவர்.80

அகத்துறை தழுவிய பாடல்களில் "பொன்மலிந்த கொண்கான நாட்டவன் நன்னன்" எனவரலாறு உணர்ததியது சிறிதாக,81 மகள் பிறந்தது தாய்வீட்டில்தான் என்றாலும் அவள் சென்று புகழ் ஈட்ட வேண்டியது, மணந்து புகுந்த வீடு தான்,82 என்பது போலும் அரிய பெரிய உண்மைகளை, அள்ளி அள்ளி வழங்கி உள்ளார், விரிப்பின் பெருகும்!

மருதம்பாடிய இளங்கடுங்கோ

சேரர் குலத்தவர். இவர் பாடிய பாடல்கள் நற்றிணையில் ஒன்று83அகநானூற்றில் இரண்டு84 ஆக மூன்று பாடல்களே எனினும்,அவற்றை மருதத்திணைப்