இலங்கையின் மாட்சி! 55 காணச் செல்கிறவர்கள் இந்நிலையை அடைகிறார்கள் என்று நாம் புத்தகங்கனிற் படிக்கிறோம். காண வருபவர் பகையரசன் நாட்டினராகவோ, அல்லது ஐயத்திற்குரிய நன்பராகவோ இருப்பின், கேட்க வேண்டுவதில்லை. அரசியலை நன்குணர்ந்த கம்பநாடன், வேண்டுமென்றே இதனை இங்ங்னம் கூறுகிறான்; எத்துணையோ சந்தருப்பங்களிருந்தும் இலங்கையை வருணிக்க வேண்டும் பகுதியை அனுமன் மாட்டு விட்டுவிடுகிறான். இதற்குக் காரணங்கள் பல உண்டு. முதலாவது, அனுமன் இலங்கைக்கும் இராவணனுக்கும் - ஏன்? - அரக்கரனைவர்க்குமே பகைவன்; மேலும் இராமனிடம் பூண்ட அன்பின் பெருக்கால் இராவணன் மாட்டுத் தீராப் பகைமை கொண்டவன்; அல்லாமலும், பிறன் மனைவியைக் கவர்ந்து செல்கின்ற செயலை முற்றும் வெறுப்பவன்; தன் தலைவனாகிய சுக்கிரீவன் படும் அல்லலைக் கண்டு அச்செயல் செய்கின்ற அனைவரையுமே அடியோடு வெறுக்கப் பழகிவிட்டவன்; அச்செயல் செய்தாரிடத்துக் கொண்டுள்ள வெறுப்புக் காரண மாக அவரிடத்துள்ள ஏனைய நற்குணங்களைக் கூட மறந்து விடுகிறான். எனவே, இத்தகையவன் கூற்றில் வைத்து இலங்கையையும் இராவணனையும் புகழ்தலே சாலச் சிறந்ததாகும். மேலும், அத்தகையவன் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இலங்கையினுள் நுழைந்து கண்ட காட்சிகளைக் கூறுதலே சிறப்புடையது. விரும்பத்தக்கனவும் தகாதனவுமான அனைத்தையும் அவன் காண்டல் கூடும். ஆகவே அவனுடைய வார்த்தைகளே சிறந்தவை. மேற்கூறியவற்றை மனத்திலிருத்திக்கொண்டு கீழ்வரும் இரண்டு பாடல்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/74
Appearance