தீமையின் வளர்ச்சி 8 197 உணர்ந்ததும், அவன் மயக்கம் தெளிந்தது: அறிவு ஓங்கிற்று பகைவனுடைய வல்லமையை உணர முடிந்தது. மாலியவானிடம், முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரிவெஞ் சிலையும் வீரன் அற்புத வில்லுக்கு ஐய! அம்பெனக் கொளலும் ஆகா, ஒப்புவேறு உரைக்கலாவது ஒருபொரு ளில்லை; வேதம் தப்பின போதும் அன்னான் தனுஉமிழ் சரங்கள் தப்பா ! (கம்பன் - 7297) எனக் கூறினான். வேதங்களை நன்குணர்ந்தவன் இராவணன், அவை ஒருபொழுதும் தப்பா என்பதையும் அவன் உணர்வான். எனினும் அவையும் தப்பலாம்; ஆனால் இராகவன் அம்பு தப்பாது' என்று கூறினான் என்றால், பகைவன் வல்லமையை இராவணன் மிக நன்றாக உணர்ந்துகொண்டான் என்றே கூற வேண்டும். அவன் ஜானகியைப் பற்றிக் கூறுவதும் இதனையே வற்புறுத்துகிறது. போயினித் தெரிவ தென்னே பொறையினால் உலகம் ... " போலும் வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கித் தியெனக்கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால் நாயெனத் தகுது மன்றே காமனும் நாமும் எல்லாம்? - - (கம்பன் - 7301) இராவணன் தெளிந்த அறிவுடன் பேசுகின்றான் என்பதற்கு வேறு சான்று வேண்டுமோ? அவனுடைய மயக்கம் அறவே நீங்கிவிட்டது; 'அறிவு பெற்றான்! இனி அவனுக்கு அழிவு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. - . . . . . . . . . . . .” ராவணன் மனம் ஆகாயத்தில் சஞ்சரிக்கத் தொடங்கியது, இன்று நேற்று அன்று. வெகு காலமாக
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/214
Appearance