பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sruožguh Genfbewuh 34 கலங்கலா அறந்நெறி, பொறியின் யாக்கை புலன் நோக்கிய அறிவு, வீடு பெற்ற விலங்கு, சிந்தை நல்லறத்தின் வழி சேர்தல், நன்று தீதென்று இயல் தெரிநல்லறிவு, தக்கது இன்ன தகாதது இன்ன, என ஒக்க உன்னல், காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான், வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் இங்கு வினை என்பது செயல்) மனையின் மாட்சி, அறத்திறன் அழியச் செய்யால் புவியுடை அண்ணல், (ஆட்சியில் இருப்போர், அறத்தின் திறனை அழிக்கும் எந்தச் செயலையும் செய்யலாகாது). தாய் என உயிர்க்கு நல்கல், தருமம், தகவு, சால்பு, நெறியினின் நோக்கும் நேர்மை, என்றெல்லாம், புதிய பல கருத்துகளும் கருத்து வடிவங்களும் நிறைந்த சொற்களைக் கம்பன் எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். கம்பன் காவியத்தில் காணும் தமிழ்ச் சொல் வளத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். “வாலியைச் சிறியன சிந்தியாதான்” என்று கம்பர் பாராட்டுகிறார். அறிவுத் தெளிவு பெற்ற வாலி, தனது விரிந்த மனப்பான்மைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் எடுத்துக் காட்டாக ஆவிபோம் வேளையில் அறிவு தந்து உதவினாய், என்று கூறி, மூவர் நீ, முதல்வன் நீ முற்றும் நீ, மற்றும் நீ பாவம் நீ தருமம் நீ பகையும் நீ, உறவும் நீ, என்றெல்லாம் இராமாவதாரத்தின் அனைத்தளாவிய தன்மையை கம்பன் தனது சொற்குறிகளால் காட்டுகிறார். சமுதாய வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அரசுகள் தோன்றுகின்றன. பாரத நாட்டில் அரசுகள் தோன்றியது என்பது வரலாற்று காலத்திற்கு முந்திய செய்தியாகும். சமுதாய வளர்ச்சிக்கு, நாட்டில் அமைதியும், பொருள் பெருக்கமும், தொடர்ச்சியான சமூக மேம்பாடும் அவசியமாகிறது. அத்துடன் இசை, இசைக் கருவிகள், கூத்து, ஆடல்பாடல் கவிதை,