உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 శ్రీ* தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இச் சூத்திரம் முன்னைய நான்கும்’ (தொல்.பொ.52) எனக் கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென் றுணர்க."

எ.டு: "கருத்தடங்கண் ... ... ... கண்ணே (பு. வெ. கைக்.1)

இக் காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறு தல் புலனெறி வழக்கன்மை உணர்க. (a ) ஆய்வுரை

இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காணுமாறு கூறுகின்றது.

(இ=ள்) (ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் மனையறத்தின் பயனாக அவ்விருவரையும் பிறப்புத்தோறும்) சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் எக்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லுழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். தலைவன் உரு திரு முதலியவற்றால் மிக்கவனாயினும் குற்றமில்லை எ- று.

ஒன்றுவித்தலைச் செய்யும் நல்லூழினை ஒன்று’ எனவும், வேறு படுத்தலைச் செய்யும் போகூழினை வேறு எனவும் கூறினார் ஆசிரியர்.

இவ்வாறு ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற்காட்சிக்கு நல்லுழின் ஆணையே காரணமென்பார், உயர்ந்தபாலது ஆணை யின்’ என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது, அவ்விருவரும் பண்டைப்பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென்பார்,

1. பிற்காலத்தில் தமிழகத்தில் அயலவர் கலப்பால் தோன்றிய கால்வகை வருண வேறுபாடு பற்றி இந்நூற்பாவுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் பண்டைத் தமிழியல் நூலாசிரியராகிய தொல்காப்பியனார் கருத்துக்கு ஒவ்வாததாகும்.

2. 'முன்னைய கான் கும் முன்ன தற்கென்ப' (அகத்தினையியல். 52) என வரும் நூற்பாவுக்கு, "இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் கற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக் கிளையா தற்குரிய என்று கூறுவர் ஆசிரியர்' எனத் தாம் முன்னர் ப் பொருள் வரைந்தமையின், அந் நான்கனுள் முதலாவதாகிய காட்சிக்கு இச்சூத்திரம் இலக்கணம் கூறிற்றென்றுணர்க' என ஈண்டும் அவ்வுரை. யொடு தொடர்புபடுத்தி விளக்கினார் கச்சினார்க்கினியர்,