பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

99


தன்னிடமிருந்தே சட்டென வெளிப்படுகிற, மறு படியும் தோன்றாத ஓர் இசையோசையைக் கேட்டு நீரோடை சிலிர்த் தெழுவதைப் போல், எண்ணங்கள் பெருக்கெடுத்து வழியும் போது ஒரு மின்வெட்டுப் போல் என் மனம் துள்ளி எழுகிறது.

-மின்

உனக்கு உண்மையான பணிவிடை செய்வதற்காக என் நெஞ்சத்தை எளிமையாகவும் தூய்மையாகவும் மனத்தை அமைதியாகவும் வைத்துக் கொள்வேன்.

-ஈ

உன்னுடைய அரியணையை விட்டிறங்கி, என் குழலின் வாயிலின் முன் நிற்கிறாய்.

-கீ

காதலே, உனது பாடங்களைக் கற்றுக்கொடு எளியவர்களுடைய ஆற்றலையும் , படையற்றவனுடைய படைகளையும் எனக்கு அளித்திடு.

-கோ

இரவின் மலர் போன்று உன் கைகளில் கடைசி தொடுதலும் மென்மையாயிருக்கட்டும்.

-தோ

பகலின் எல்லையை இரவு தொடும் இடத்தில் உன்னை நான் எதிர்கொள்கிறேன்.

-எ