பக்கம்:கல்வி உளவியல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கல்வி உளவியல் காலம் வாழாது, அல்லது பலன் தராது ; கோவில்கள் போன்ற கட்டிட இடுக்குகளில் விழுந்தால் என்ன நேரிடும் என்பதை நாம் அறிவோம். அது நல்ல கிலத்தில் வீழ்ந்து உரம், நீர், வெயில் போன்ற சாதகமான கிலேமைகளைப் பெற்ருல், அது ஒரு சிறந்த தாவரமாக வளரும் ; நிறைந்த பலனையும் தரும். தாவர வளர்ச்சிக்கு விரையும் வேண்டும்; மண்ணும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்ருென்ருல் வளர்ச்சி என்பதே இல்லை. இரண்டும் தனித்தனியாகவும் செயற்பட முடியாது; இரண்டும் ஒன்றை யொன்று தழுவி நிற்கின்றது. இவ்வாறே ஒரு குழந்தையின் வளர்ச்சி யிலும் குடிவழியும் சூழ்நிலையும் இன்றியமையாத பங்கினைப் பெறுகின்றன. தாவர உலகைவிட்டு மக்கள் உலகிற்கு வருவோம். ஒருவனுக்கு ஏற்பட்டுள்ள ஏதாவதொரு திறமை குடிவழியாக வந்ததா, சூழ்நிலையால் அமைந்ததா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. ஓர் இசைக் கலைஞனின் மகன் இசைப்புலவகைத்திகழ்ந்தால், குடிவழிதான் காரணம் என்று உறுதியாகக் கூறுவது சரியன்று. அவனுடைய தந்தையைப் போலவே அவனும் சூழ்நிலையில் இருந்த பல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அத்திறனைப் பெற்றிருக்கலாம். இசைப்புலமை ஒரு தலை முறையில் சிறிது கால வாழ்க்கையில் பழகியதல்ை குடிவழியில் கிடைக் கும் என்று எண்ணுவது சிறிதும் பொருந்தாது. கணக்கற்ற தலைமுறை களில் பல்லாயிரம் யாண்டுகளின் பழக்கத்தால் பல பண்புகள் குடிவழி யாகக் கிடைக்கின்றது என்று கருதுவதில் ஓரளவு பொருத்தம் இருக்க லாம். இதனை மறந்து கணித ஆசிரியரின் மகன் கணிதத்தில் திறமை யாளகை இருப்பான் என்றே, வரலாற்று ஆசிரியரின் மகன் அறிவியல் நிபுணகை ஆக முடியாது என்ருே கருதுவது தவறு. குலவித்தைக் கல்லாமல் பாகம் படும்' என்ற மேற்கோளுக்கு உளவியல் கருத்துப்படி சிறிதும் பொருள் இல்லை. x குடிவழி ஒருவனுக்குச் சாத்தியமாகக்கூடிய கூறுகளைக் குறிக்கின் றது ; சூழ்நிலை அவற்றைச் சிறந்த முறையில் வளர்க்கும் வாய்ப் பினைத் தருகின்றது ; அவ்வளவுதான். சூழ்நிலை மனிதனை ஆக்குகின்றது ; மனிதனும் சில சமயம் சூழ்நிலையை ஆக்குகின்றன். வள்ளல் அழகப்பரின் வாழ்க்கையும் அறிவியல் மேதை சி. வி. இராமனின் வாழ்க்கையும் இவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக அமையலாம். வள்ளல் அழகப்பர் வெறும் ஆலே முதலாளியாக மட்டிலும் இருந்து கல்விநிலையங் களே ஏற்படுத்தி யிராவிட்டால் கல்வித் துறையில் இவ்வளவு சேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/153&oldid=777821" இலிருந்து மீள்விக்கப்பட்டது