பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


வருமுயிர் இரக்கம் பற்றியே உலகவழக்கில்
என் மனஞ் சென்ற தோறும்
வெருவி நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன்
விண்ணப்பம் செய்கின்றேன் இன்னும்
உருவ என்னுயிர்தான் உயிரிரக்கம் தான்
ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும் என்னுள்ளத்
தொருவனே நின்பதத் தாணை

(திருவருட்பா 3806)

தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும்
தலைவனே இன்னும்என் உளமும்
மலைவிலென்னறிவும் நானும்இவ்வுலக
வழக்கிலே உயிரிரக்கத்தால்
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம்
என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும்
நீங்கும்நின் திருவுளமறியும்.

(திருவருட்பா 3507)

ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்
ஆடலே யன்றி யோர்விடயக்
காதலால் ஆடல் கருதிலேன்விடயக்
கருத்தெனக் கில்லை என்றிடல் இப்
போதலால்சிறிய போதும் உண்டதுநின்
புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதெனதிடத்தே
இல்லைநான் இசைப்பதென் எந்தாய்

(திருவருட்பா 3508)

என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய்
இருக்கவே இசைவித்திவ் வுலகில்
மன்னுவாழ் வுறவே வருவித்த கருணை
வள்ளல் நீ நினக்கிது விடயம்