பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்துர் வேயர் பயந்த விளக்கு 18 Ꭵ. அண்ணன்' என்ற பெயரும் நிலைத்து விடுகின்றது. கம்பர் பெருமான் இத்தலத்திற்கு வந்ததாகவும் அவர் ஆண்டாளுக் குச் சூடகம்' என்ற தலையணியை வழங்கியதாகவும் செவி வழிச் செய்தியால் அறிகின்றோம். திருமலை நாயக்கரும் இத்திருக் கோயிலின் திருப்பணியில் பங்கு பெற்றிருப் பதையும் தெரிகின்றோம். ஆண்டாள் கோயிலில் சுக்கிர வாரக் குறட்டில் ஒரு கம்பத்தில் இருக்கும் நாயக்கரின் சிலை இதனை அரண்செய்கின்றது. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியையும் பெரியாழ் வாரையும் பற்றிப் பின் வந்தோர் பன்னூறு பாடல்களைப் பாடியுள்ளனர். திருமாலையாண்டான் ஆண்டாள் பற்றி அருளிய தனியனை மேலே கண்டோம். மணவாள மாமுனிகள் இப்பிராட்டியைப் பற்றி அருளிய பாடல் புகழ் பெற்றது. 'அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சிகிற்கும் தன்மையளாய்-பிஞ்சாய்ப் பழுந்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்க்து.' என்ற பாசுரத்தை அறியாத வைணவர்களே இரார். அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் வந்த வேயர் பயத்த விளக்கினைப் பக்தியுடன் பரவிய நாம் பெரியாழ்வாரின் பெருமையைப் பேசும் பாசுரத்தையும் நினைவுகூர் கின்றோம்.

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்துார் என்றொருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம்-முன்னாள் கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினிற் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.' (மின்ஆர். ஒளி நிறைந்த கமலம்-தாமரை, கிழி. பொற்கிழி, கீழ்மையினில் சேரும் வழி-தரகம்) 25. உப. ரத். மா.ைல-24 26. பாண்டிபட்டர் அருளிய தனியன்.