பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் |போக்யம்-இனிய பொருள்; த்வரை-பதற்றம்; பிரகடம் ...தெரியும்) என்ற சூத்திரம் நம் நினைவுக்கு வருகின்றது. மிக்க பசி புடையான் ஒருவன் சோறுவேதற்கு முன்னே பதற்றத் தினால் அதன் அருகே வந்து நிற்பது இருப்பது, கிடப்பது மாய்த் தனது அலமாப்பைக் காட்டுவது போன்று, எம்பெருமானும் தனக்கு இனியரான ஆழ்வாருக்குப் பரம பக்தியாகின்ற பக்குவம் பிறக்குமளவும் ஆறியிருக்க மாட்டாமல் தனக்குண்டான பதற்றத்தைச் சீவைகுண்டம், வரகுணமங்கை, புளிங்குடி ஆகிய மூன்று திவ்விய, தேசங்களிலும் நிற்பது, இருப்பது, கிடப்பது என்ற நிலைமைகளினால் காட்டியருள்கின்றான் என்பது இதன் கருத்தாகும். இதனை ஆழ்வார் தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய்!” என்ற விளியினால் ஒருவாறு காட்டியருளும் திறனையும் எண்ணி மகிழ்கின் றோம். பசிகனத்தவன் அன்னம் பக்குவமாகும் இடத்தை விட்டகலாதாப்போலே எம்பெருமானும் ஆழ்வாருடைய பக்திப் பரிபக்குவம் ஆகும் இடமான திருவுள்ளத்தை விட்டு அகலாமல் இருப்பதைக் காட்டுகின்றது இத் தொடர், சீவைகுந்தத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மானை ஆண்டிற்கு இரண்டு முறை பகலவன் (சூரியன்). வழிபாடு செய்கின்றான் என்பதை அர்ச்சகர் சொல்லக் கேட்கின்றோம். சித்திரைத் திங்கள் ஆறாம் நாளும் ஐப்பசித் திங்கள் ஆறாம் நாளும் இளங்கதிரவனின் கிரணங்கள் கோபுரவாயில், மண்டபங்கள் இவற்றையெல் லாம் கடந்து வந்து எம்பெருமானின் திருமேனியைத் தடவி அதனைப் பொன்னிறமாக்குகின்றன. இத்தகைய ஒரு. சிறப்பு இத்திருத்தலத்தைத் தவிர வேறிடங்களில் இல்லை என்பதையும் அறிகின்றோம். மூலவர், உற்சவர் இவர்களினின்றும் விடைபெறுவ தற்கு முன்னர் திவ்விய கவியின் பாசுரம் தம் நினைவிற்க. வருகின்றது.