88
நூறாசிரியம்
பெறுதலும், மலர்ச்சி யுறுதலுமின்றி வறிதே கிடத்தலால் கவின் முலை எனலாயிற்று. பயனிலதான வெறும் அழகு சிறப்பிழந்த தாகையால் அஃது இழித்துக் கூறப்பெற்ற தென்க.
ஐயறிவே வாய்க்கப்பெற்ற விலங்கினங்கள் கூடத் தாய்மை எய்துதலும் அதனால் மகிழ்தலுமாக் இருக்கையில், ஆறறிவு பெற்றாளாகிய தான் தாய்மை நலம் எய்தாளாக மலட்டுத் தன்மை வாய்ந்திருப்பது தலைவிக்கு மிகு துயரை வருவித்ததாம் என்க.
எத்துணைதான் பெண்மை நலம் வாய்ந்தவளாக விருப்பினும் ஒருத்தி பிள்ளைப் பேறின்றி இளமையழிதல் மிகவும் வருந்துதற்குரியது. அவள் அழகும் இளமையும் சிறப்புப் பெறுவன அல்ல-என்றவாறு.
பொருந்தாக் காமத்துப் போதரும் பிற கருச் செய்திகள் யாவும் தலைவன் தலைவியரின் காதல் தொடர்புடையனவாக மட்டும் இருப்ப, இது தமிழிலக்கியத்துப் புதுக் கருத்தாக நிற்றலோடமையாது, தலைவன் தலைவிக் குற்ற இணைப்பு பொருத்தமற்றதாகி, இவளை மலடாகியது பற்றி, இதுவும் பொருந்தாக் காமத்துள்ளேயே அடக்கப் பெற்ற தென்க.
இப் பாட்டு பெருந்தினையும் இல்லவை நகுதலென் துறையுமாகும்.