பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக இங்.

அதையடுத்து, ‘அமர்கொள்மரபின் தும்பையும் வாகையு மான போரும் வெற்றியுமொழிய, மற்றைய விழுப்பமும் விழும் மும் விளைக்கும் 'பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித் தாய பிறவொழுக்கத் தொகையாம். காஞ்சித்திணையும் அதன் துறைகளும் உஉ-முதல் உச-வரையுள்ள சூத்திரங்களாற் கூறப்படுகின்றன.

இவ்வியல் ஈற்றில், இகலில் மிக்கார் வெற்றிமட்டுமன்றி, எனைத்துவகையானும் மேதக்காரை மீக்கூறலாய் அவர் பீடும் வீறும் புகழும் பாடாண்டிணையும் அதன் பொதுச் சிறப்பியல்பு களும் வகைதுறைகளும் விரிக்கப்படுகின்றன.

இப்பழையமுறையினைத் தழுவாமல், பன்னிருபடலம், வெண் பாமாலை முதலிய பிற்கால நூல்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாக்கிக் கொண்டன. பன்னிருபடலம் பிற்கால நூலாதல் தேற்றம். அதிற் கூறப்படும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி முதலிய பலதிணையியலும் அவற்றின் துறை வகையும் தொல்காப்பியர் கொள்கையொடு மாறுபடுதல் கண்கூடாதலின், முரணுமிவ் விரண்டும் ஒரே கணக்காயரிடம் இத்திணைகளை ஒருங்கு கேட்டோர் கூற்றாதல் கூடாமை ஒருதலை. பன்னிரு படலத்தின் வெட்சிப்படலம் தொல்காப்பியரால் அவரிவ்வியலிற் கூறுவதற்கு மாறாக இயற்றப்பட்ட தென்பதொன்றே பன்னிரு படலமாச்கியோர் காலம்பற்றிய கதையின் பொய்மையைத் தெளிப்பதாகும். 'பன்னிரு படலத்தில் வெட்சிப்படலம், தொல் காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது” என்று இளம்பூரணர் இவ்வியல் வெட்சி கூறும் சூத்திரவுரைக்கீழ் விளக்கியுள்ளார். புறத்திணைத் துறைகளைப் பலவாறு பிற்காலத்தே பிறழக் கூறியோர் தம் பெயரொடு கூறத்துணியாமல், தம் நூலுக்கு உடன் பாடும் ஆட்சியும் பெறவேண்டிப் பண்டைப் பெரியோர் பெயரோ டதனை வெளிப்படுத்தியது வியப்பில்லை. ஞானவெட்டியை வள்ளுவருக்கும், புலமையற்ற பல பிற்காலச் சோதிட மருத்துவச் செய்யுட்களை அகத்தியருக்கும் சுமத்தியது போலவே, காலத்தால் மிகப்பிந்திய பன்னிரு படலத்தை, தமிழகத்துப் 'புலந் தொகுத் தோனெனத் தன்பெயர் நிறீஇய' தொல்காப்பியருக்கும், அவரோடொருபள்ளி மாணவராகக் கருதப்பெற்ற பழம்புலவருக் கும் சுமத்தியுள்ளாரெனத் தெளிதல் எளிதாம். இனி இப் "பன்னிருபடலம் முதனூலாக (அதன்) வழி நூலே...வெண்