பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 357 தோற்றுகையாலே எல்லோரும் இந்த உபாயத்திற்கு, அதாவது பிரபத்திக்கு, அதிகாரிகள் ஆவர் என்பதைத் தெரிவிக்கின்றார். அதிகாரியைப் பெற்றாலும், உபாயம் சித்தம் ஆனாலும் பற்றுதல் இல்லாதபோது உய்வதற்குக் காரணம் ஆகாமை உாலே அப்பற்றுந்தன்மையை கழல்கள் அவையே சரணாகக் கொண்ட (5.8 : 11) என்றும், சாங்க அநுட்டான வேளை யில், அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன். (6.10 : 1.0) என்றும் அருளிச் செய்தார். இங்ஙனம் பற்றுதல் கை கூடுவதும் இறைவன் அருளால்தான் நடைபெறும் என்பதை நின் பாதமே சரணாகத் தக்தொழிந்தாய் (3.7 : 1.0) என்றும், ‘அதுவும் அவனது இன்னருளே’ (8.8 : 8) என்றும் அருளிச் செய்தார்.பற்றும் தலைவனது மனநிலையின் தன்மையினைக் களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் (5.8 8) என்றும், நாடொறும் ஏக சிந்தை யினாய் (5-10 : (1) என்றும் அருளிச் செய்தார். இவ் வபாயத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில், "மற்றொன் றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும். சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் (9.1 : ; ) என்று உபாயத்தின் எளிதாம் தன்மையை அருளிச் செய்து, இப் பிரபத்தியை வகைப்படுத்தி அருளிச் செய்கிற இடத்தில் இப்பிரபத்தி பக்திக்கு அங்கமன்று, தானே இருந்து காரியத்தைச் செய்யவல்லது என்பதை விளக்குவதற்காக சரணமாகும் (9.10 : 5) என்று தொடங்கி மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று பேறு முடிய முழுதினையும் நடத்தும் என்று அருளிச் செய்தார். இவ் வுபாயத்தினையே உறுதியாக நம்பியிருப்பவருக்குக் காலங் கழிக்கும் வகை (பொழுதுபோக்கும் வகை) இருக்கும்படி என்? என்னில்; 'தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் அண்டத்தமரர் பெருமான்