பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே சரணம்: அணிந்துரை திரு. தி. அ. கிருஷ்ணமாசாரிய சுவாமிகள், 76, சந்நிதி தெரு, காஞ்சி-3 அறிவும் அநுபவமும் ஆன்மகுணங்களும் பரமாத்ம பக்தியும் நிறைந்து அகவையாலும் முதிர்ந்த பேராசிரியர் டாக்டர் திரு ந. சுப்புரெட்டியாரவர்கள் இப்போது "வடவேங்கடமும் திருவேங்கடமும் என்பதோர் நூலை எழுதி வெளியிடுகிறார். இவர் இதற்கு முன்பெழுதி வெளியிட்ட சில நூல்களைப் போலவே இதன்கண்ணும் பதினெட்டுக் கட்டுரைகளை அமைத்துள்ளார். 18 என்ற எண் ஜய' என்ற சொல்லைக் குறிப்பதாகப் பெரியோர் கள் பணிப்பதற்கேற்ப, பதினெட்டுக் கட்டுரைகள் அடங் கிய இவருடைய நூல்களும் உலகில் வெற்றிக்கொடியை நாட்டி வருகின்றன என்றால் அது மிகையாகாது. பதி னெட்டுப் பருவங்களைத் தன்னகத்தே கொண்ட வியாச மகாபாரதம் 'ஜய' என்னும்-பொருள்பெற்ற பெயரைப் பெற்று இவ்வுலகில் ஒரே சீராக விளங்கி வருகின்ற மையை இங்கு நினைத்தல் தகும். இந்நூலில் 1 முதல் 4, 6-ஆகிய ஐந்து கட்டுரைகள் ஆராய்ச்சியாக அமைந்துள்ளன. அவற்றில் - வடவேங் கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்றுள்ள-பரம்பாரனார் இயற்றிய தொல்காப்பியப் பாயிரத்தில் குறிக்கப்பெற்ற வடவேங்கட"மென்பது, இப்போது பிரசித்தமாக உள்ள திருவேங்கடமென்ற திருப்பதிமலையன்று. இது ஒன்றோடொன்று ஒழுங்கற்ற