பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.சி தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

நெருங்கிய தொடர்பு பற்றியே என்பதனைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இனிது விளக்கியுள்ளார்கள்.

உ. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் கள வின்

ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும். இளம்பூ னர் . இது, வெட்சித்திணையாமாறு உணர்த்துதல் துதலிற் று.

(இ-ன்.) வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக்களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்-வேந்தனால் விடப்பட்ட முனை ஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினனே ஆவைக் கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்து.

ஒம்புதலாவது, மீளாமல் காத்தல். புறப்பொருட் பாகு பாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால் வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராதலானும் அவர்க்கு மாற்றரசர்பால் திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்த தாகலானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்று கோடல் வேண்டுதலானும், போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப்பட்டது.

பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழி லென்று. அன்ன இருவகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும் பை முதலாயின எடுத்துச்செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கி னாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூற லாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல் காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது." என்னை?

1. முனைஞர்-முனையூரகத்துள்ளார். முனையூர் என்றது, நாட்டின் எல்லைப்புறத்தே வகைப்புலத்தை நோக்கியமைக்கப் பெற்ற படைவீரர் குடியிருப் பினை, மேவற்று-மே வலையுடைத்து.

2. ஒம்புதலாவது, மீளாமற்காத்தல் என இளம்பூரணர் தரும் இவ்விளக்கம். ஆவைக்கொண்டுபெயர் துலும் அதனை மீளாமற் பாதுகாத்தலும் ஆகிய வெட்சி தேவர் செய்தியே ஆதந்தோம்பல்” என்ற தொடராற் குறிக்கப்பெற்றது என்னும் அவர் கருத்தினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

3. படைவீரர் அரசனது ஆணை பெற்றுப் போர்மேற் செல்லுதல் வேந்துறு தொழில் எனவும், அரசனது ஆணை பெறாது படைவீரர் தாமே போர்மேற் செல்லுதல் தன்னுறுதொழில் என வும் கூறப்படும். நாடாள் வேந் தனது ஆணை யின்றித் தன்னுறுதொழிலாகப் படைவீரர் பகைவர் நாட்டிலும் ஆ பலிடங்களிலும்