பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக *:శ్రి

பிறகு, பகையடப் படையொடு மேற்செல்லும் வஞ்சித் திணையை அதன் வகை துறைகளொடு சு-முதல் அவரையுள்ள சூத்திரங்கள் விளக்குகின்றன.

அதையடுத்து, வேற்றுப்புலத்துப் படைகொடு செல்வோர் மாற்றலர் இருக்கையையெய்தி மலையுமுன் தம் ஆற்றிடை அக நாட்டுப் படையரண்களை எறிதல் அல்லது அகப்படுத்தல், அமர் வென்று தாம் மீள இன்றியமையாதாகலானும், அடையலரின் இடையரண்களை முற்றி எறிதலும் கோடலும், அவர்கட்கு வேண்டப்படுமாகலானும், அவ்வொழுக்கமாய உழிஞைத்தினை யும் அதன் வகை துறைகளும் இவ்வியலில், சு-முதல் கட-வரை யுள்ள சூத்திரங்களால் தெளிக்கப்படுகின்றன. முற்றுவோர் முயற்சியை அரண்காவலர் முரணாது தடுப்பதும், அக்காவலர் எதிர்ப்பைக் கடந்தடக்கியன்றி அரண் எறிதல் கூடாமையும் இயல்பாகும். முற்றுவாரின்றி மதில்காவற்போர் நிகழுமாறில்லை யாகலானும், முற்றியெறிவாரின்றி வாளா அரண்காத்திருத்தல் நொச்சியெனக் கருதப்படாதாகலானும், அரண் எறிமுறையின் ஒருதிறனா அடங்கும் முற்றெதிர்ப்பைப் பிற்காலத்தவர்போல வேறுபிரித்து நொச்சியெனத் தனித்திணையாக்காமல். செந் தமிழியற்கை சிவணிய நிலத்துப் பழைய முறை பேணி முற்றுகை பற்றிய உழிஞைத் திணையிலடக்குவர் தொல்காப்பியர்.

அவற்றின்பின், பகைமேற் சென்றாரைத் தகைத்து நின்றா ரெதிருன்ற, தானையிரண்டும் தம்முள் தலைமயங்கி மலைதலாகும் தும்பைத் திணையையும், அதன் வகை துறைகளையும் கச-முதல் க.எ-வரையுள்ள சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. படையெழுச்சியை மட்டும் வஞ்சியென வகுப்பதும், சென்றாரை நின்றாரெதிர்ப் பதைக் காஞ்சியெனத் தனியொரு தினையாப் பிரிப்பதும், எதிர்த் திருபடையும் அதர்ப்பட மலைதலைத் தும்பையென வேறோர் திணையாக் கூறுவதும் பிற்கால வழக்கு. சென்றாரை நின்றார் எதிர்ப்பது போராய்த் தும்பையிலடங்குதலானும், பொருதலற்ற எதிர்ப்பெதுவுங் கருதல் கூடாமையானும், பண்டைத் தமிழ் நூலோர் சென்ற பகையெதிர் நின்றுதகையும் எதிர்ப்பும், இரு திறப்படையும் ஒருதலை மலையும் போரும் உடனமையத் தும்பை யென வொருதிணையே கொண்டார்; தொல்காப்பியரும் அப்பழ மரபே பேணிக் கூறுவர்.

1. வருதலும் செல்லலும் இருதிறத்தார் தொழில்களாய் இருதிறத்தாரும் ஒரு களத்துப் பொருதலே தும்பை என்பது தொல்காப்பியனார் கருத்தாகும். எனவே: