பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு ச தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

16. காதலியிழந்த தபுதாரநிலையும்-அன்புடை மனை வியை யிழந்த கணவனது தபு தாரநிலைக் காஞ்சியும்;

குறிப்பு :- "தாரம்தபு' என்பது தபுதாரம்' என நிலை மாறி நின்றது. முன்றில், கடைப்புறம் என்பனபோல. அதனால் சொல்மாற்றி, "தாரம் தபுநிலை-இல்லாளையிழந்த நிலை’’ எனப்பொருள் கொள்ளற்பாற்று. தபுதல்-கெடுதல்; அதாவது இழவு.

17. காதலனிழந்த தாபத நிலை-காதற் சணவனையிழந்து தவிக்கும் மனைவி நிலை குறிக்கும் தாபதநிலைக் காஞ்சியும்:

18. நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாவை நிலையும்-மனைவி, இறந்த கணவனோடு ஈம மேறிப் பெருந்தீயிற் புகுவாள் இடைவிலக்குவார்க்குக் கூறும் பாலைக் காஞ்சியும்;

19. மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப் பெயனிலையும்-பெருஞ்சிறப்பொடு களத்துப்பொருது மாய்ந்த மகனைப் படையழிந்து மாறினன் எனப் பிறர் பழிகூறக் கேட்ட தாய், அன்னவனை யீன்றமைக்கு நாணித் தன்னுயிர்விட முனைந்து களஞ்சேருந் தலைப்பெயனிலைக்காஞ்சியும்:

இனி, 'மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயர' எனப் பாடங்கொண்டு, 'சிறப்பழியப் புதல்வன் புறக்கிட எனப் பொருள்கூறி, அதற்குத் தகடூர் யாத்திரைப் பாட்டின் பகுதியை எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். அது, தாயின் மூதின் மறம் பேணினும், மகனைப் புறக்கொடைப்பழி பூணவைப்பதால், அப்பாடத்தினும் 'புதல்வற் பயந்த' என்ற இளம்பூரணர் பழம் பாடமே பொருட்சிறப்புடைத்து.

20. மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செலச் செல் லாக்காடு வாழ்த்தொடு-விரிந்த இடத்தையுடைய உலகத்து இயல்முறை நன்றாய் உணருமாறு பல்லோரும் மாய்ந்தொழியத் தான் ஒழியாது நிற்கும் புறங்காட்டை வாழ்த்தும் காஞ்சியுடன்; நிறையருஞ் சிறப்பில் துறைஇரண்டுடைத்தே-நிரம்பிய அரிய சீருடைய காஞ்சித் துறைகள் இருவகைத் தாம்.

குறிப்பு :- இதில் ஆன் எல்லாம் அசை. ஏகாரம் ஈற்றசை இசைநிரப்பெனினும் அமையும்.

முதலில் ஒருபத்தைக்கூறி, "நிலையொடு தொசை இ ஈரைந் தென்ப' என எண்கொடுத்துப் பிரித்து நிறுத்தியதுடன், என்ப"