பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ബ

புறத்திணையியல் நூற்பா உப உஇக

திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண்டிணையாயினும், ஒருவனை ஒன்று: நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரை வேண்டிப் பெறு வதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப் புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென் றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப்புறன் ஆகாதென உணர்க.

இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒரு வாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன. இப் பாடாண் டிணைக்கு ஒதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும், இரு வகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பை யும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டு

ԱDքT LI .

இனி இக்கூறிய ஏழு திணையும் பாடாண்டினைப் பொருளா மாறு காட்டுங்கால் எல்ல்ாத்திணையும் ஒத்ததாயினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவை யிரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற். கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க.

இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பா னாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம்.

'அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா னானை பிரிய வயிரைக் . கொழுமீ னாக்கைய மாந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழிய விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழிஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு மகன்கண் வைப்பி னாடும னளிய

1 பொருளும் பகுதியும்:

2 அவலெறி புலக்கை 3 குமுறலின் குஆன்,