பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

2. புல்லறிவாண்மை

இது, கொடுத்தானாயினும் வரிசையறியாது கொடுக்குமாதலின்

இத்துணையும் புல்லறிவின் இயல்பு

... “)| Tyl புள் லறிவா யிற்று H

7

க. ப்பட்ட து

848. அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை

யின்மையா வையா துலகு.

(இ-ள்) நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை; பொரு வின்மையை நல்குரவாக எண்ணார் உலகத்தார்; அது புண்ணி பம் செய்யாதார் மாட்டே சேருமாதலான். (எ-று)

அறிவு புண்ணியம் செய்தாற்கு உளதாமோ எனின், அது முயற்சியானும் வருமாதலின் வேறு பகுத்துக் கூறினார் இது அறிவின்மையான் வரும் குற்றம் கூறுவார் முற்பட இதனின் மிக்க நல்குரவில்லை என்றார். 8

849. அருமறை சோரு மறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

(இ-ள்) அறிவில்லாதான் தான் அரிதாக எண்ணின மறைப் பொருள் சோரவிடும்; அதுவேயன்றித் தனக்குத்தானே பெரிய துன்பத்தினையும் செய்துகொள்ளும், (எ-று).

சோரவிடுதல்-பிறர்க்குச் சொல்லுதல். இது, பொருட்கேடும் உயிர்க்கேடும் தானே செய்யுமென்றது. 9

850. அறிவிலார் தாந்தம்மைப் பிழிக்கும் பிழை

செறுவார்க்குஞ் செய்த லரிது.

(இ-ள்) அறிவிலாதார் தாமே தம்மை யிடர்ப்படுத்துமது பகை வர்க்கும் செய்தல் அரிது, (எ-று).

இது, மேற்கூறியவதனை வலியுறுத்திற்று. இதனானே பிழை கூறுகின்ற துன்பத்தை உண்டாக்குமவற்றுக்குக் காரணமாம்

என்பது உம் கண்டு கொள்க. 10