பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பதினெண் புராணங்கள் கொண்டார். விஸ்வாமித்திரரை ஒரு பறவையாகப் போகட்டும் என்று சபித்தார். இதை அறிந்த விஸ்வாமித்திரர், வசிட்டரும் ஒரு பறவையாகப் போகட்டும் என்று எதிர் சாபம் கொடுத்தார். இரண்டு பேரும் மாபெரும் தவம் உடையவர்களாதலின் இருவர் சாபமும் பலித்தன. இருவரும் பறவையாயினர். மலை போன்ற உடல் படைத்த மிகப் பெரிய பறவைகளாக ஆயினர். பறவையான பிறகும் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த கோபம் தணியவில்லை. இரண்டு பறவைகளும் ஓயாது ஆகாயத்தில் பெரும் போர் புரிந்தன. அப்போரின் விளைவாக பூமியில் உள்ள மலைகள் பிளந்தன. சில இடங்களில் பூமி வெடித்து நீரூற்று பெருகிற்று. இப்போரின் தேவையற்ற தன்மையையும், அதனால் பிற உயிர்கட்கு விளையும் தீமையையும் கண்டு அஞ்சிய பிற முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன் நேரே வந்து போரை நிறுத்துமாறு சொல்லியும், பயன் ஒன்றும் இல்லை. பிரம்மன் உடனே அவர்கள் இருவரையும் அவரவர் சுய வடிவிற்கு மாற்றிவிட்டார். மானிட வடிவு பெற்ற வசிட்டரும், விஸ்வாமித்திரரும் தங்கள் செயலுக்கு வெட்கித் தலைகுனிந்தனர். பிரம்மன் வசிட்டரைப் பார்த்து, விஸ்வாமித்திரர் செய்த காரியத்தால்தான் அரிச்சந்திரன் இந்த உடம்போடு மோட்சம் செல்ல முடிந்தது என்று கூறிய வுடன், வசிட்டரும் அதை ஏற்றுக் கொண்டு, விஸ்வாமித்திர ரைக் கட்டிப் பிடித்து பகைமையை மறந்தார். மகாமதியும் சுமதியும் பார்க்கவ பரம்பரையில் மகாமதி என்ற பிராமணனுக்குச் சுமதி என்றொரு மைந்தன் இருந்தான். இளைஞனாக வளர்ந்த பிறகும்கூட அவன் வெளியே எங்கும் செல்லாமல், யாரையும் பார்க்காமல், வாய் திறந்து பேசாமல் இருந்து வந்தான்.