பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 பதினெண் புராணங்கள் சாமவேதம் கூறியது தேவதேவன் என்று சொல்லப்படுபவர் சங்கரரே ஆவார். அவரைச் சுற்றியே பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, மறைவு ஆகியவை நடைபெறுகின்றன. யோகிகள் தம் ஆத்ம ஞானத்தால் அறிந்து மூலப் பரம்பொருள் என்று வழிபடுவதும் இவரைத்தான். அதர்வனவேதம் கூறியது மெய்ஞ்ஞானிகள் பவன் என்றும், புருஷன் என்றும், ருத்ரன், தேவதேவன் என்றும் அறிந்து வழிபடுவது இவரைத் தான். வேதங்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், ஏளனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு, பரப்பிரம்மம் என்பது, எதையும் பற்றாமல் இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் தேவதேவன் மனைவியோடு வாழ்கின்றவர். அவருடைய பரிவாரங்கள் மிகவும் கர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று கூறியவுடன் வடிவமற்றதாகிய 'பிரணவம் ஒர் வடிவெடுத்து பிரம்மன் முன் நின்றது. பிரணவம் பேசத் தொடங்கிற்று: - “மகேசன் என்று சொல்லப்படும் சங்கரன், அல்லது சிவம் நீ நினைப்பது போல் தன்னிலும் வேறான ஒரு தனிப்பட்ட பொருளைச் சக்தி என்று கூறித் தன்னுடன் வைத்துக்கொள்ள வில்லை. அந்தச் சக்தி சிவனின் வேறுபட்டதன்று. பார்வதி என்ற அப்பெண் தெய்வம், பரமனின் அனந்த சொரூபம் அன்றி அவனின் வேறுபட்டுத் தனித்தியங்கும் இயல்புடைய தன்று. பிரணவம் இவ்வாறு பேசியும், அஜன் என்றழைக்கப் படும் பிரம்மன் மாயையினின்று விடுபடவில்லை. அந்த மாயையும் சிவனால் அருளப்பட்டதே ஆகும். அஜன் என்ற பிரம்மன் இவ்வாறு பேசிக் கொண் டிருக்கையில், அவன் எதிரில் விண்ணையும், மண்ணையும்