பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 தமிழ் பயிற்றும் முறை

டிருப்பினும் அவற்றின் அடிப்படைக் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தானிருக்கும். தமிழகத்தில் தொடக்கநிலைக் கல்வித்திட்டம், உயர்நிலைக் கல்வித்திட்டம், பல்கலைக்கழகக் கல்வித்திட்டம் என்ற பொதுக். கல்வித் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் தொழில்துறைக் கல்வித்திட்டங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு திட்டங்களும் முடிவு பெறுவதற்குக் கால எல்லேகளும் வகுக்கப்பெற்றுள்ளன. கல்வித்துறை அலுவலர்களும் கல்வி நிலையத் தலைவர்களும் அந் நிலையங்களில் பணியாற்று ஆசிரியர்களும் ஒத்துழைத்து மேற் குறித்த திட்டங்களேச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர். அத் திட்டங்களைப்பற்றிப் பொதுவான செய்திகளைத் தமிழா. சிரியர்கள் அறிந்திருப்பதுடன் தாம் பணியாற்றும் துறையிலுள்ள கல்வித்திட்டத்தைபற்றியும் தெளிவாக அறிந்திருத்தல்வேண்டும். ஒவ்வொரு கல்வித்திட்டத்திலும் உள்ள தமிழ்ப்பாடத் "திட்டங்களைப்பற்றித் தெளிவான கருத்து பெற்றிருக்கவேண்டும். தம்முடைய பணி சிறக்க வேண்டு. மானுல் எவ்வெவ்வாறு பயிற்று முறைகளை வகுக்கவேண்டும்? அவற்றை எவ்வாறு நிறை வேற்ற வேண்டும்? என்பனபோன்ற கருத்துக்களில் தமிழாசிரியர்கள் தம் சிந்தனையைச் செலுத்தவேண்டும். ஒவ்வொரு மாளுக்கனும் கற்கவேண்டிய மொழிகளைப்பற்றிய விவரங்களும் அவர்களுக்கு இன்றியமையாதது.

மாணுக்கர்கள் கற்கவேண்டிய மொழிகள் : இன்றைய கல்வித்திட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் மாணுக்கர்கள் கற்க வேண்டிய மொழிகளைப்பற்றி மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. கல்வித் திட்டத்தில் மொழிகளைக் கற்பதைப்பற்றிப் பலர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறி யுள்ளனர்; கூறியும் வருகின்றனர். இன்று மும்மொழி ourifiufG (Three language formula) usbG sugus?:5 stip ய்ைவுக்குட்பட்டு வருகின்றது. உயர்நிலைக் கல்வியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து கூறும் அறிக்கையில் அதுபற்றிய