பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔等盛 பரகாலன் பைந்தமிழ்.

விட்டால் உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலத்தவர்களைப் போலவே அடியேனும் சுகமாக வாழ்வேனன்றோ? ஆகவே பக்தியைத் தவிர்த்துக் கொள் ளலாமா என்றும் எனக்குத் தோன்றுகின்றது; பாவியேன் திறத்தில் என்ன திருவுள்ளமோ? சொல்வியருள வேண்டும்?' என்று விண்ணப்பம் செய்கின்றாள்.

  • உன் மனத்தால் என்னனைநதிருந்தாய்?' என்று. பாசுரம்தோறும் ஒருமுறைக் கொன்பதுமுறை வினவிக் கொண்டே வந்தவர் அதற்கு ஒரு மறுமொழியும் பெறாமல் எங்ங்னம் பதிகத்தை முடித்துவிட்டார்? என்ற வினா எழுகின்றது. மறுமொழி பெற்றே முடித்தார் என்பதே இதற்கு விடை. 'என்னிணைந்திருந்தாய்?" என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி, ஆழ்வீர்? நீர் கவலையற்றிரும்': உம்மை நாம் கை விடுவோமா? உம் மிடத்தில் பூர்ணக் கிருபை செய்ததாகவே திருவுள்ளம் பற்றியிருக்கின்றோம்; இல்லையாகில் அங்கு நின்றும் இங்கு வந்து திருவிட எந்தையில் நிற்போமா? அஞ்சற்க; உமக்கு அருள்புரிந்தோம் என்று எம்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச் செய்ததனால் தேறுதல்டைந்து இத்திருமொழியைத் தலைக்கட்டினார். 'அருளாய், என்னுமித் தொண்டர்க்கின்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை' (10) என்றதனால் இது தெளிவாகின்ற தன்றோ?

2. கள்வன் கொல் ? (3, 7) ; இத் திருமொழி திருவாலி எம்பெருமான்பற்றியது. தாய்ப்பாசுரமாக அமைந்தது. இதில் ஒரு பாசுரம்.

கள்வன்கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளைவந்து வள்ளிமருங்குல் என்றன்

மடமானினைப் போதவென்று