பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {} தமிழ் பயிற்றும் முற்ை

கவிப்பா அமுதம் இசையின் கறியொடு

கண்ணன் உண்ணக் குவிப்பான்

என்று கவிப்பா இன்ப அமிழ்த மாவதையும், அஃது இசை யுடன் சேர்த்து உண்ணப்படும்பொழுது தெவிட்டாத தெள்ளமுது மாவதையும் கூறியிருத்தல் ஈண்டு சிந்திக் கற்பாலது. திருவாசகத் தேனில் திளைத்த இராமலிங்க வள்ளலும் தாம் பெற்ற இன்பத்தை,

வான் கலந்த மாணிக்க வாசக ! நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால் கலந்துசெழுங்கணித் தீஞ் சுவை கலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே."

என்று காட்டுகின் ருர். இவ்வின்பத்தை அடையும் வழியை நன்கு அறிந்து கொண்டால், விேலையிலிருந்து நீங்கி ஓய்வு பெறுங் காலத்திலும், முதுமை காரணமாக அவலக் கவலேயாலும் தளர்ச்சியாலும் துன்பப் படும்பொழுதும் இவ் வின்பம் இளமை யுணர்ச்சியையூட்டி மட்டில்லாத மகிழ்ச்சி யையும் அளிக்கும்.

அன்றியும், இவ்வுலக வாழ்வில் வயிற்றுப் பிழைப்புக் காகப் பல துறைகளில் கிடந்துழன்று உழைத்து அலுத்துப் போகும்பொழுது தோன்றக் கூடிய வெறுப்பை இவ்விலக்கிய இன்பம் போக்கிவிடும். கீழ்மக்கள் கூட்டுறவு, சோம்பல், வீண்காலப் போக்கு முதலிய பல குறைகளே நீக்கவும் இலக்கியப் பயிற்சி துணே புரிகின்றது. அன்ருடவாழ்க்கையில் நேரிடக் கூடிய ஏமாற்றங்களையும் இடர்ப்

  • சடகோபரந்தாதி-எ,

இராமலிங்க அடிகள் ஆளுடைய அடிகள்

அருள் மாலை-செய். ,

5