19 என்று அக்குறிப்பில் உள்ளது. துக்கோஜி கி. பி. 1736இல் தெய்வகதி ! அடைந்தார். ஆனால் அவர் மனைவியருள் ஒருவராகிய லக்ஷாம்பாயி கி. பி. 1779இல் குறிக்கப்பெற்றதால் இவர் தம் கணவர் இறந்த பின்னர் 43 ஆண்டு கட்குமேல் உயிர் வாழ்ந்தனராதல்கூடும். இவர் இறந்தபொழுது இறுதிச் சடங்குகளுக்காக 60 சக்கரம் கொடுத்ததாகத் தெரிகிறது. துக்கோஜியின் மகன் பிரதாபசிங்கர் காலத்தில் 1756இல் இந்த லக்ஷாம்பாயி சாயேப் அவர்களுக்கு " ஸர்வமான்யம் அக்ரஹாரத்துக்கும் தர்மத்துக்கும் மாதிரிமங்கலம் வகை யறாவில் 13; வேலி இமா' என்ற குறிப்பினால் பிரதாபசிங்கர் தம் மாற்றாந் தாய்களுள் லக்ஷாம்பாயி அவர்களுக்குத் தருமம் செய்ய நிலங்கள் அளித்த செய்தி தெரிகிறது.'அ துக்கோஜிக்குப் பார்வதிபாய் என்ற பெண் இருந்ததாக ஒரு குறிப் பினின்று அறியவருகிறது. அப்பார்வதிபாயியின் மருமகள் அம்பிகாபாய் என்றும், கி. பி. 1802இல் அவர் வாழ்ந்ததாகவும் அக்குறிப்பால் அறியப்பெறும். கி. பி. 1798க்குரிய குறிப்பிலும் அம்பிகாபாய் குறிக்கப்பெற்றுள்ளார்." இரண்டாம் ஏகோஜி - சுஜான்பாயி இவர் துக்கோஜியின் மகன் ஆவர். இவருக்குப் பாவாசாகேப் என்றும் பெயருண்டு. இவருக்கு ஆறு மனைவியர் இருந்தனர். அவர்களுள் மூத்தவர் சுஜான்பாயி. பாவாசாகேபு 1736இல் இறந்தார். இவர்க்குப் பிள்ளைகள் இல்லை. ஆகவே சுஜான்பாயி சிம்மாசனம் ஏறினார். இவை கி. பி. 1857இல் இரண்டாம் சிவாஜியின் மூத்த மனைவியாகிய காமாட்சியம்பாபாயி அவர்கள், ஜான்புருஸ் நார்ட்டன் என்பவரைக்கொண்டு சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபொழுது அவ்வழக்கறிஞர் கூற்றில் விளங்கக் காணலாம்: : தஞ்சாவூரில் ஐந்தாவது மன்னராகப் பாவாசாகேப் அவர்கள் புத்திர லந்தானமில்லாமல் ஆறு பெண்சாதிகளை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள் அல்லவா ? அவர்களுள் முதல் சம்சாரமான சுஜான்பாயி என்பவர்கள் அவருடைய எல்லா ராஜ்யமும் தான் முக்கியமுடையவர் என்று எல்லா வற்றையும் வசப்படுத்திக்கொண்டு இராஜ்யபாரம் நடத்தினார் அல்லவா?" மேலும், 1857இல் பல பெருந்தரத்து அலுவலர்கள் குர்மகாலுக்கு வந்து, கமிஷனர் இட்டிருந்த முத்திரையைச் சாட்சியுடன் உடைத்து மா. சுஜ்யான் பாயி அவர்கள் ராஜ்யபாரம் செய்தபொழுது கொடுத்த "சிகாசன்னதுகளில் நான்கை 17. பக்கம் 84, போன்ஸ்லே வம்ச சரித்திரம் (தமிழ்) 17.அ. 8-145, 146 18, 2-168 19, 4-88 20. பக்கம் 81, போன்ஸ்லே வம்ச சரித்திரம் (தமிழ்) 21. பக்கம் 85 11 11 22, 2–284, 285
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/29
Appearance