பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ బ్రీ బ్రీ தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரை வளம்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஒதலும் வேட்டலும் ஈதலும் உழவும் திரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும், வேதம் ஒழிந்தன ஒதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடு மாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்;

வாணிகரையும் வேளாளரையும் வேறு கூறாது இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார். வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின்.

இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாரு முளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட் டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழி பாடு உரித்தென்பர்.

பக்கமென்பதனான் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னிய ராகத் தோன்றினாரையும் அடக்குக; ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குத் தொழில்வரையறை அவர் நிலைகளான் வேறு வேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ங்ணம் பக்க மென்ப தனான் அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன.

உதாரணம் : -

"ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார்-வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல் சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து.'

(பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு-குடிமரபு) இது வாணிகரீகை. , , இரு துன்று மரபின் ஏனேர்பக்கம் என்பதற்கு, இளம்பூரணரும் நச்சி னார்க்கினியரும் எழுதிய உரையும் விளக்கமும் நால்வி கை வருணப் பாகுபாட் ' ஆறுத்தும் பிற்கால மிருதி நூல்களை அடியொற்றியன், ந்தன; அவை ஆதியூரியின் அந்தத்தே நூல் செய்த தொல்காப்பியனார் கருத்தர்கா. மிருதி கால கூறும் நால்வகை வருணப் ப்ாகுபாட்டின்படி வேளாளரை நான்காம் வருணத்தவராகக் கொள்ளுதலும் அவர்க்குரிய தொழில்களுல் மூவகை வருணத்

ణ్డు ஒரு தொழிலாகச் சேர்த்து எண்ணுதலும், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கம்’ - # και ir-.ெ -- 2 எனவும், குமி 5 வுயிர்க்கும (திருக்குறள்-பெருமை-2)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லா ந் - தெழுதுண்டு பின் செல் பவர்? (திருக்குறள்- .ழ வு-3) எனவும் வருடி தமிழ் முறைக்கு ஒவ் வாதனவாம்.

ஆணி ஆர்க்கு வேளர்ளக்கு வழிபாடும் வேள்வியும் ஆகிய தொழில்கள் முறையே ஒவ்வாத நிலையில் அவ்விருதிறத்தாரையும் தொழில் வகை பற்றி இரு மூன்று மரபின் ஏனோர் எனக் கூட்டியுரைத்தார் தொல்க்ாப்பியனார் என்றல்

ஏற்புடையதன்றாம். - -

(பாடம்) 2 வாணிகர்க்கு, வேளாளர் கன்னியர்கட் போன்றினாரையும்’.