73
73
சுந்தரம் : எல்லாப் பூக்களையுமா தலையில் சூடிக்கொள்ளு கிறார்கள்! (ஒரு பூவைப்பறித்து மூக்கில் வைத்து முகர்ந்து பார்க்கின்றான்.) மணி : அந்தப் பூவில் மணம் வருகின்றதா? சுந்தரம் : இல்லையே! எந்த மணமும் வரவில்லையே! (ஆசிரியர் ஒரு பூவினைப் பறித்துக் காட்டி இதைப் பாருங்கள்’’ என்கின்றார்) மாணிக்கம் : (ஆசிரியரிடமிருந்து அந்தப் பூவை வாங்கி முகர்ந்து பார்க்கின்றான்.) ஆ! கம கம வென்று நறுமணம் வருகின்றதே! சில மலர்களில் ஒன்றுமே மணம் வரவில்லை ஐயா! ஆசிரியர் : ஆமாம்! அப்படித்தான்! பூத்திருக்கின்ற எல்லாப் பூக்களிலும் மணம் இருப்பதில்லை! சில மலர் களில்தான் இருக்கும். பலவற்றில் இருக்காது. இங்கே நல்ல இடமாகப் பார்த்து உட்காருங்கள்! (அருகில், பூஞ்செடிகளுக்குப் பக்கத்தில் மாணவர்கள் உட்கார்ந்து கொள்ளுகின்றார்கள். ஆசிரியரும் அமர்ந் தார்.) மாணிக்கம் : ஐயா! ஏன் எல்லா மலர்களிலும் மணம் வருவதில்லை? ஆசிரியர் : அது இயற்கையின் தன்மை! மணமுள்ள மலர் களும் உண்டு! மணமில்லாத மலர்களும் உண்டு மண முள்ள மலர்களை நாம் தூரத்திலிருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். மணம் வீசும்! மணமில்லாத மலர்களை அருகில் வந்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி மலர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சுந்தரம் : ஆம் ஐயா! எனக்குத் தெரியும் ஐயா! நான் பார்த் திருக்கின்றேன்! -