உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 இருந்த தல்லவா? இரண்டு தட்டுகளும் சமமாகத்தானே இருந்தன! பிறகு எடைபோட்டு பார்த்தபோதும் சமமாகத்தானே இருந்தன! அந்த முள்ளும் நேராகத் தானே இருந்தது! அதுபோல நாமும் எப்போதும் யாருக்கும் வ ஞ் ச னை யாக நடந்துகொள்ளாமல் நற்குணங்கள் நிறைந்து எந்தப் பக்கமும் நன்மைக்கு மாறுபாடாகச் சாய்ந்து நடந்துகொள்ளக் கூடாது. சீர்தூக்கிக் காட்டுகின்ற தராசு நமக்கு எவ்வளவு நல்ல உண்மையினைப் போதித்தது பார்த்தீர்களா? குறட்பா சொல்லுகின்றேன். எழுதிக்கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்லுகிறார், மாணவர்கள் எழுதுகின் றார்கள்.) சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. சமன் செய்து - சமமாக இருந்து, சீர்தூக்கும் - நன்றாக அளவு காட்டுகிற, கோல்போல் - துலாக்கோல் போல, அமைந்து - நற்குணங்கள் நிறைந்து, ஒருபால் - ஒரு பக்கத்தில் மட்டும், கோடாமை - நேர்மையில்லாமல்-சாயாமல் இருப் பதுதான், • சான்றோர்க்கு - பெருந்தன்மை நிறைந்தவர்களுக்கு, அணி - அழகாகும். (மாணவர்கள் எழுதி முடித்துப் படிக்கிறார்கள்.) மணி துலாக்கோல் என்றால் என்ன ஐயா? ஆசிரியர் : அதுதான் தராசு. அந்த வணிகர் வைத்துக் கொண்டிருந்தாரே அதுதான். அதைத்தான் தராசு’ என்றும் சொல்லுவார்கள். மாணிக்கம்! உனக்கு ஏதா வது ஐயம் இருக்கிறதா? .