உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

İ İ 5

டாகும் தீமைகளையும் நாள் தோறும் அகற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆட்சி செய்யும் முறையினை ஆற்றில் செல்லுகின்ற படகிற்குச் சமமாகக் கூறலாம். படகு ஒட்டுகிறவன் கைத் துடுப்பினை முன்புறமும் பின்புறமும் செலுத்துபவனாகவே இருக்கின்றான். அதுபோலவே ஆட்சி செய்யும் தலைவனும் நன்மைகளைப் போற்றலும், தீமைகளைக் களைதலும் ஆகிய இருபெரும் கடமைகளைச் செய்துகொண்டே மக்க ளைக் காத்தல் வேண்டும். உலகத்தினைக் காத்து அளிக்கவல்ல இறைகுணம் பெற் றிருக்கும் பண்பாட்டினை-பண்புகள் நிறைந்த ஒன்றினை உஇறைவன் என்று குறிப்பதுபோல, குடிமக்களை நல்ல ஆட்சியினால் காப்பாற்றுகின்ற தலைவனையும் இறைவன் என்றே கொள்ளுதல் வேண்டும். முறைசெய்து காப்பாற்றுகின்ற மன்னவனை மக்களுக்கு இறைவன் என்றே கொள்ளுவீர்களாக. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும். முறை - அற நூலும் நீதி நூலும் சொல்லும் நெறியில், செய்து - ஆட்சி செய்து, காப்பாற்றும் - மக்களைக் காப்பாற்றுகின்ற, மன்னன் - மன்னவன், . மக்கட்கு - மக்களுக்கு, இறை - செயலினாலே இறைவன், என்று - என்பதாக, x வைக்கப்படும் - வைக்கப்படுவான்.