உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

133 உண்மை உணராத மக்கள் பொய்யான மயக்க எண் ணங்களை மனத்தில் வைத்து வாழ்க்கையினைப் பாழ் படுத்திக் கொள்கின்றனரே! இல்லறத்திற்குரிய நல்ல குணங்களைப் பெற்றுப் பழகக் கற்றுக்கொள்ளுங்கள். இல்லறத்தில் வாழ்பவர்கள் மிகமிக அரிய பண்புகள் பெற்றிருந்தால்தான் வாழ்க்கையினை அமைதியுடன் நடத்த இயலும். இல்லையேல் மனங் கலங்கித் தவறுகள் பல ஏற்பட்டே தீரும். இன்பமும் துன் பமும் இயற்கை என்ற பெரும் பழக்கத்தினை நாள்தோறும் நினைத்துப்பார்த்து நடந்துகொள்ளுங்கள். ஒருகால், இன்பம் வந்தபொழுது அமைதியுடனும் அளவுடனும் அதனை மேற்கொள்ளுங்கள். பெரிய பேரா னந்தத்துடன் மகிழ்ச்சி அடைவதால்தான் பின்னர் பெருந் துன்பமாக எளிய இன்னல்களும் தோன்றுதல் கூடும். துன்பம் வருங்கால் இயற்கை என்று எண்ணுங்கள். இந்தப்படியான பழக்கம் பழகியவர்கள் எக்காலத் திலும் இன்பமுற வாழ்பவர்கள் ஆகின்றார்கள். இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் துன்பம் உறுதல் இலன். இன்பம் - இன்பமானவற்றை, விழையான் - விரும்பாமல், இடும்பை – துன்பம் வந்தால். இயல்பு - இது இயற்கை, என்பான் - என்று சொல்லுபவன். துன்பம் - எந்நாளும் துன்பம், உறுதல் - அடைதல், இலன் - இல்லையாவான்.