148
148 என்று சொல்லவும் வேண்டுமா? விற்றற்கு உரியர்' என்ற சொற்களைக்கொண்டு அந்தக் கயவர்கள் தம்மைக்கொண்டு போய் பிறரிடத்தில் அடிமையாக விற்றுக்கொள்வார்கள் என்பதைக் குறிக்கிறார். . ஏதோ தமக்கு துன்பம் வந்துவிட்டதே. அத்துன்பத்தை எவ்வாறு போக்குவது? ஏதாகிலும் முயற்சி செய்ய வழி இருக்கிறதா? என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கவும் மாட்டார்களாம். மானமே அற்றுப்போன கயவர் கூட்டந் தானே! உடனேயே தங்களை அடிமைப்படுத்தி விற்க ஒடிவிடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரைந்து' என்ற சொல்லினையும் அழகுற அமைத்து விட்டார். இப்பொழுது பழக்கத்தில் ஒரு சிலர் 'மானத்தை விற்றுப்பிழைக்கிறார்கள்’’ என்று பேசுகிறார்களே அக் கருத்தினையும் இக்குறட்பா நினைவு ஊட்டும் முறையில் அமைந்திருக்கிறது. மனிதனுக்கு இருக்கின்ற இழிவான குணங்களில் முயற்சியினை விட்டுத் தன்னையும், தன் மானத்தையும் விற்றுப் பிழைக்கின்றதைப் போன்ற தொன்று வேறு எதுவுமேயில்லை. அவனே கயவன். குறட்பா: எற்றிற்கு உரியர்கயவர் ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. கயவர் - கயவர்கள், ஒன்று உற்றக்கால் - ஏதாவது இடையூறு வந்து விடுமானால், விரைந்து - உடனே ஒடி, விற்றற்கு உரியர் - தம்மை மற்றவனிடத்தில் அடிமை யாக விற்று விடுவார்கள், (இது இல்லாமல்) எற்றிற்கு உரியர் - வேறு எந்தத்தொழிலுக்குத்தான் உரியவர்கள். 一大一