71
7
இருக்கும், ஊக்கம் குறைந்து விட்டால் அவனுடைய உயர்ச்சியும் குறைந்தே போகும். நன்றாக விளங்கு கின்றதா? குறட்பாவையும், பொருளையும் சொல்லு கின்றேன். எழுதிக்கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்லுகின்றார். மாணவர்கள் எழுதுகின் றார்கள்.) வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. மலர் - நீரிலுள்ள மலர்களுடைய கொடிகளின் (தாள்கள்), நீட்டம் - நீளமானது, வெள்ளத்தனைய - தண்ணிர் நிற்கின்ற உயரத்தின் அளவில் இருக்கும், (அதுபோல) மாந்தர் - மனிதர்கள், உயர்வு - உயர்ச்சியானது, உள்ளத்தனையது - அவரவரின் மனத்தில் உண்டாகும் ஊக்கத்தினையே பொருத்திருக்கிறது. - (மாணவர்கள் உரையினை எழுதி முடித்துப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் கேள்விகள் கேட்க தொடங்கினார்.) ஆசிரியர் : சுந்தரம் வெள்ளம்’ என்று கூறியது என்ன? சுந்தரம் : வெள்ளம் என்பது தண்ணிர் ஐயா! ஆசிரியர் : முருகேசன்! நீ சொல் இப்போது: உள்ளத் தனையது உயர்வு’ என்றால் என்ன? முருகேசன் : மக்களுக்கு ஊக்கத்தினைப் பொருத்தே அவரு டைய உயர்ச்சியும் இருக்கின்றது ஐயா! ஊக்கம் சிறந்