45
45
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. 'தம்பி எழுதிக்கொண்டாயா! இந்தக் குறட்பாவில் நமது திருவள்ளுவர், மணற்கேணி என்று சொல்லி இருக்கி றாரே, அதைப் புரிந்துகொண்டாயா? "புரியும்படி சொல்லுங்கள் அண்ணா!' 'தம்பி, அந்த இடத்தில்தான் அருமையான அரிய உண்மை அடங்கி இருக்கிறது. சாதாரண தரையில் தோண்டமாட்டார்கள். மணற்கேணியில் தான் தோண்டத் தோண்ட தண்ணிர் ஊறும். மணற்கேணிதான் தண்ணி ரைக் கொடுக்கும். அதற்காகத்தான் மணற் கேணி என்று கூறப்பட்டது.” 'அண்ணா! கல்வி கற்கவேண்டும் என்பதற்கு அளவு இல்லையா அண்ணா!' - 'அளவு ஏது தம்பி! ஆயுள் முழுதும் படித்துக்கொண்டே கல்வி கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ந்து வரும். மணற்கேணியை நீ பார்த்தாயே, அதில் தண்ணிர் ஏதாவது தட்டுத் தடங்கலாக வந்ததா? தோண்டத் தோண்ட நீர் ஊறிக்கொண்டே பெருகி வர வில்லையா? அறிவும் கல்வி கற்றுக்கொண்டே இருந்தால் வளரும். கல்விக்கு அளவு வைத்து நிறுத்திவிட்டால் அறிவு வளர்ச்சியும் தடைப்பட்டுவிடும் தம்பி’ போதும் அண்ணா! நன்றாக விளங்கிவிட்டது. கல்வி யும் அறிவும்! அதை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை எவ்வளவு தெளிவாகக் குறட்பா சொல்லுகிறது அண்ணா!' 'தம்பி! மாலை நேரம் வந்துவிட்டது. வீட்டிற்குப் போகலாம் வா." போகலாம் அண்ணா! இவ்வளவு விளக்கம் திருக்குற ளைப் பற்றிக் கூறியதற்கு மிக்க நன்றி.” 一女一