121
13 I
பன்முறையும் சிந்தித்துப் பாருங்கள். மனம் போன போக்கில் வாய்விட்டுப் பேசும் வகையற்ற அமைச்சர்கள் நாட்டினைக் கெடுத்தேவிடுவார்கள். ஆட்சி நிலையற்று அப்படிப்பட்டவர்கள் விரைவில் மறைந்துவிடவும் கூடும். அமைச்சர்களுக்கு உயிர் போன்று எண்ணப்பட வேண் டிய சிறந்த குணங்களில் - ஆற்றல்களில் தலைசிறந்தது சொல்வன்மையாகும். பேசும் ஆற்றல் என்பது பெரும் ஆற்றலென்பதை உணர்வீராக. அளந்து பேசும் அறிவு மிகச் சிறந்ததென்பது உலகறிந்த உண்மை. பேசும் சொற் கள் மற்றவர்களைப் பிணிப்பதாக இருத்தல் வேண்டும் என்பது பேச்சுக்குரிய இலக்கணங்களில் ஒன்றாகும். ஒர் அழகிய காட்சியினைக் கண்குளிரக் கண்டவுடன் அதனையே பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்படுகிறோ மல் லவா? அதுவேபோல, ஒருவர் பேசும் பேச்சுக்களை மற்றவர் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது அவருடைய உள்ளம் வேறு எங்கும் செல்லாதவாறு கட்டிப்பிடித்து விடுமாறு பேசுதல் வேண்டும், கேட்டார் ப் பிணிக்கும் தகையவாய் என்ற குறிப் பினை முதலாவதாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பேசக்கூடிய ஆற்றல் - அழகு - அவ்வளவோடு நின்றுவிடு கிறது என்று எண்ணிவிடாதீர்கள். கேட்க விரும்பாத பகைவர்களுங்கூட கேட்குமாறு செய்வதுதான் பேச்சின் திறம் என்பதனை உள்ளத்தில் நிறுத்திவைப்பீர்களாக, பகைவர்களும் ஆ, இவ்வரிய சொல்லுரையினைக் கேட்கக்கேட்க இனிமையாக இருக்கின்றதே!’ என்று புகழும்படியாக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில் சிறிது நேரம் எண்ணிப்பார்த்தால் பேசவேண்டிய வர்கள் நண்பர்களுக்குமட்டுமல்ல, பகைவர்களையும் நண் பர்களாக்கும் வகையில் பேசுவது எப்படி என்ற எண்ணத் தினையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பதை அறிந் துணர்ந்துவிடுவார்கள்.