உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. சான்றோர்க்கு - ஒழுக்கம் நிறைந்த பெரியவர்களுக்கு, எல்லா விளக்கும் - வெளியில் இருட்டினைப் போக்கு கின்ற விளக்கெல்லாம், விளக்கல்ல - விளக்குகள் ஆகாது. பொய்யா விளக்கே - மனத்தில் இருளைப் போக்கு கின்ற பொய்யாமை என்கின்ற விளக்கே, விளக்கு - உண்மையான விளக்காகும். (மாணவர்கள் இக்குறட்பாவினையும் பொருளையும் படித்துக்கொண்டிருக்கின்றனர்.) மாணிக்கம் : படிப்பதற்கு இந்த வெளிச்சம் போதவில்லை &шт! . ஆசிரியர் : சரி! மாணவர்களே! புறப்படுங்கள்! இன்று நான் உங்கட்குச் சில குறட்பாக்களைத்தான் சொன் னேன். அடுத்த முறை அதிகமாகப் படிக்க வேண்டும். (மாணவர்களும் ஆசிரியரும் பூங்காவிற்கு வெளியே வந்தனர்; ஆசிரியரிடம் விடை பெற்றுக்கொண்டு மாண வர்கள் தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.)