109
# 09
இல்லாளை - மனைவிக்கு, அஞ்சுவான் - அஞ்சுகின்றவன், நல்லார்க்கு - நல்லவர்களுக்கு, நல்ல - நல்லனவற்றை, செயல் - செய்தற்கு, எஞ்ஞான்றும் அஞ்சும் - எந்நாளிலும் அஞ்சுபவனா வான் . பெண்ணேவல் செய்து ஒழுகும் ஆண்களைப் போன்ற தொரு பேதைமை வாழ்க்கை இருக்கவேமுடியாது. மனைவி -வாழ்க்கைத் துணைவியாக இருப்பதைவிட்டு வாழ்க்கை யில் தீங்கிழைப்பவளாகின்றாள் என்பது போல இருத்தல் கி.-Tது . இல்லறத் தலைவன் என்பது நன்கு சிந்திக்கப்பட வேண் டியதாகும், இன்பத்துணைவியர் இல்லற வாழ்க்கையில் கடமைகளை உணர்ந்து நற் கட்டளைகளுக்குக் கட்டுப்பட் டுப் பணிந்து வாழ்தலே கடமையுமாகும். இம் முறையினை அடிமைப் பண்பு என்று கூறிவிடுதல் அறிவிலித்தனமாகும். வலது கை - இடது கை ஆகிய இரண்டும் சமநிலையில் இருந்தாலும் வேறுபாடு உள்ள தன்மையில் கருத வேண்டி யவைகளாகவும் இருக்கின்றன அல்லவா? சமத்துவம் - உரிமை - என்பவைகள் ஆழ்ந்துணர வேண்டிய மெய்யுரைகளாகும். இன்ப உரை-வாழ்க்கைத் தன்மை - அனைத்தும் உரிமையுடையவைகளேயாகும். சொற்கள் - செயல்கள் - இன்ன பிற உலக நிகழ்ச்சிகள்பலவற்றுள்ளும் ஆண்களுக்குச் சமமாகவே பெண்களுக்கும் உரிமையுண்டு என்று பேசுதல் பேதைமையாகும்; இயற் கைக்கு மாறானதும் ஆகுமென்று அறிக.