40
40 தெரிவிக்கின்றன. அதாவது, கொக்கு குத்தி உடனே தனது எண்ணத்தை முடித்துவிட்டது போல, நாம் காரி யத்தை முடித்துவிடவேண்டும். தம்பி! இன்னும் சொல்லு கிறேன் கேள். உலகில் மிகப்பெரிய செயல்கள் எல்லாம் காலத்தையும் இடத்தையும் பொறுத்துத்தான் நடந்து முடி கின்றன. நமக்கு நல்ல நேரங்கள் அடிக்கடி வரும். உடனே காரியங்களை முடித்துவிட வேண்டும்.’ அண்ணா! இங்கேயே இருக்கலாமா? பொழுது சாய்ந் ததும் வீட்டுக்குப் புறப்படுவோம்.” அப்படியா தம்பி! உனக்கு இந்த இடம் ரொம்பவும் பிடித்துவிட்டது போல் இருக்கிறது. இன்னும் குறள் தெரிந்துகொள்ளவேண்டாமா நீ? , எனக்கா ஆசை இல்லை! நிறைய குறட்பாக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் அண்ணா! இங்கேயே இன்னும் ஒரு குறட்பா சொல்லிக்கொடுங்கள். பிறகு புறப்படு வோம். ' "அப்படியென்றால் சரி தம்பி! ஆற்றங்கரை ஓரமாகவே கொஞ்ச தூரம் நடப்போமா? நடக்கலாம் அண்ணா!' (இருவரும் நடக்கிருர்கள்.)