உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

இணர் - கொத்துக் கொத்தாக, ஊழ்த்தும் - மலர்ந்திருந்தும், நாறா - மணம் இல்லாத, மலரனையர் - பூப்போன்றவர்கள் ஆவார்கள். (மாணவர்கள், எழுதி முடித்துப் படித்துக் கொண்டிருக் கின்றனர்.) மணி! நீ நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்! மனமில்லாத மலர் என்றால் யார்? மணி : நூல்களைக் கற்றிருந்தும் மற்றவர்களுக்கு எடுத் துரைக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் மணமில்லாத மலர்கள் போன்றவர்கள். ஆசிரியர் : மாணிக்கம் இப்போது நீ சொல்! மணமுள்ள மலருக்கும் மணமில்லாத மலருக்கும் என்ன வேறுபாடு? மாணிக்கம் : மணமுள்ள மலரை எல்லோரும் விரும்புவார் கள் ஐயா! மணம் இல்லாத மலரை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆசிரியர் : சரி! இப்போது வேலன் பதில் சொல்லட்டும்! கற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? வேலன் : கற்றவர்கள் தாம் கற்றவைகளை, நன்றாக விரித்து மற்றவர்கள் உணரும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் ஐயா! ஆசிரியர் : இந்தக் குறட்பா உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. நீங்கள் நன்றாகக் குறள் படிக்கின் நீர்கள்! இன்னும் அதிகமாக உங்கட்கு எடுத்துச் சொல்லப் போகின்றேன். இதுவரை நீங்கள் குறள் படித்ததற்குப் பரிசு உங்கட்குக் கொடுக்க வேண்டாமா? மாணிக்கம் : கொடுங்கள் ஐயா!