64
64 மாணிக்கம் ! ஐயா! முருகேசனை அடக்கமாக இருக்கச் சொல்லுங்கள் ஐயா! ஆமையினைப் பற்றி இப்போது தானே சொல்லிக்கொடுத்தீர்கள்! (மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றார்கள்) ஆசிரியர் : போதும் உங்கள் விளையாட்டு! விளையாட் டிலும் குறள் நீதியை மறக்காமல் சொல்லுகிறீர்களே ! இனி இந்தப் பூங்காவில் பார்க்கவேண்டியதையெல் லாம் சுற்றிப் பார்ப்போம்! எல்லோரும் வாருங்கள். (ஆசிரியரும் மாணவர்களும் போகின்ருர்கள்) வேலன் ஐயா! இங்கே பார்த்தீர்களா! அழகாக பல உருவங்கள் செய்துவைத்திருக்கிறார்கள்; பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன! - ஆசிரியர் : ஆமாம்! பூங்காவில் இதுபோல் உருவங்களைச் செய்து நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். இவை எல்லாம் பூங்காவுக்கு வருகின்றவர்கள் பார்த்து மகிழ்ச்சியடைவதற்காகத் தான் வைக்கப்பட்டிருக்கின் றன . சுந்தரம் : போர் வீரனைப் போல ஒர் உருவம் நிற்பது மிகவும் அழகாக இருக்கிறது ஐயா! மணி : அதைவிட இந்த உருவம் அழகாக இருக்கின்றதே! (கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டிருப்பதைப் போன்று பையன் உருவத்தைக் காட்டுகின்றான்.) ஆசிரியர் : ஆம்! ஆம்! எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட அழகான உருவங்கள்தான். அலங்காரமாகச் செய்து வைத்திருக்கிறார்கள்! - (ஆசிரியர் சிறிது நேரம் சிந்தனை செய்துகொண்டு நிற்கிரு.ர். பிறகு பையன்களைப் பார்த்து கையால் உட்கா ருங்கள் என்பதாக சைகை செய்தார்; மாணவர்கள் புல் தரையில் உட்கார்ந்துகொண்டனர்.)